‘மொரட்டு ரொமான்ஸ்.. Milk and Whiskey..’ – ‘ரோமியோ’ படத்தின் புதிய போஸ்டரை வெளியிட்ட படக்குழு..!

0
84

‘Romeo Movie’: இயக்குநர் விநாயக் வைத்தியநாதன் இயக்கத்தில் நடிகர் விஜய் ஆண்டனி நடிக்கும் திரைப்படம் ‘ரோமியோ’. இந்த திரைப்படத்தில் விஷாலின், மிருணாளினி ரவி ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.

இந்த படத்தை விஜய் ஆண்டனி வழங்கும் குட் டெவில் புரொடக்ஷன் தயாரிக்கிறது. இந்தப் படம் இந்த ஆண்டு கோடை விடுமுறையை முன்னிட்டு திரையரங்குகளில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வந்த நிலையில் அண்மையில் படப்பிடிப்பு நிறைவு பெற்றது. ‘ரோமியோ’ திரைப்படத்தின் தமிழ்நாடு வெளியீட்டு உரிமத்தை உதயநிதி ஸ்டாலினின் ‘ரெட் ஜெயன்ட் மூவிஸ்’ நிறுவனம் கைப்பற்றியுள்ளது.

இந்த நிலையில், ‘ரோமியோ’ படத்தின் கதாநாயகன் நடிகர் விஜய் ஆண்டனி தனது ‘X’ தளத்தில் படத்தின் புதிய போஸ்டரை வெளியிட்டுள்ளார். மேலும் அந்த பதிவில், ‘மொரட்டு ரொமான்ஸ்.. Milk and Whiskey.. சம்மர் பிளாக்பஸ்டர்..’ என குறிப்பிட்டுள்ளார்.

மேலும், அந்த போஸ்டரில் முதல் ராத்திரி பெட்டில் அமர்ந்திருக்கும் கதாநாயகன் தனது கையில் பால் சொம்புடனும், கதாநாயகியும் தனது கைட்யில் விஸ்கியுடனும் இருக்கும் புகைப்படம் இடம்பெற்றுள்ளது. இந்த போஸ்டர் வெளியாகி சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here