‘நான் வாங்கிய விருதை ரூ.25 லட்சத்திற்கு ஏலத்தில் விற்றேன்’ – ரசிகர்களுக்கு ஷாக் கொடுத்த விஜய் தேவரகொண்டா..!

0
140

Vijay Deverakonda: இயக்குநர் பரசுராம் பெட்லா இயக்கத்தில் விஜய் தேவரகொண்டா நடிக்கும் திரைப்படம் ‘ஃபேமிலி ஸ்டார்’. இந்த படத்தில் கதாநாயகியாக மிருணாள் தாக்கூர் நடிக்கிறார். இந்த படத்தை பிரபல தயாரிப்பாளர்கள் தில்ராஜூ மற்றும் சிரிஷ் ஆகியோர் தயாரித்துள்ளனர்.

இந்த படத்திற்கு கோபிசுந்தர் படத்திற்கு இசையத்துள்ளார். இந்த படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த படத்தின் டீசர் சமீபத்தில் வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது.

‘ஃபேமிலி ஸ்டார்’ திரைப்படம் வருகிற ஏப்ரல் 5ஆம் தேதி ரிலீஸாகவுள்ளது. இந்த நிலையில், தான் வாங்கிய விருதுகள் குறித்து சமீபத்தில் நேர்காணில் பேசிய விஜய் தேவரகொண்டா, “நான் வாங்கிய சில விருதுகள் அலுவலகத்தில் இருக்கும்.

சில விருதுகளை அம்மா வைத்திருப்பார். அந்த விருதுகளில் எது என்னுடையது, எது என்னுடைய தம்பியுடையது என்று கூட எனக்குத் தெரியாது. ‘அர்ஜூன் ரெட்டி’ படத்திற்காக நான் வாங்கிய விருதுகளை படத்தின் இயக்குநரிடம் கொடுத்துவிட்டேன்.

முதல் முறையாக நான் சிறந்த நடிகருக்காக பிலிம்பேர் விருதை பெற்றேன். அந்த விருதை ரூ.25 லட்சத்திற்கு ஏலத்தில் விட்டேன். விருது என்ற பெயரில் வீட்டில் ஒரு பொருளாக இருப்பதை விட இந்த மாதிரி ஏலத்தில் விட்டதால் நல்ல பணம் கிடைத்தது.

அந்தப் பணத்தைத் தொண்டு நிறுவனத்திற்கு நன்கொடையாக கொடுத்துவிட்டேன்” என்றார். தான் வாங்கிய விருதினை ஏலத்தில் விட்டதாக விஜய் தேவரகொண்டா கூறியது ரசிகர்களை அதிர்ச்சியடைய செய்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here