ஷூட்டிங் முடிந்தும் வீட்டிற்கு போகாத விஜய்..! என்ன காரணம் தெரியுமா?

0
128

இயக்குநர் வெங்கட் பிரபு இயக்கத்தில் நடிகர் விஜய் நடிக்கும் படம் ‘The Greatest of all Time’. இந்த படத்தை ஏஜிஎஸ் தயாரிப்பு நிறுவனம் தயாரித்து வருகிறது. தளபதிக்கு ஜோடியாக நடிகை மீனாட்சி சவுத்ரி நடிக்கிறார். மேலும், சினேகா மற்றும் லைலா ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளனர்.

அதுமட்டுமல்லாமல் நடிகர்கள் மைக் மோகன், பிரபுதேவா, பிரசாந்த், ஜெயராம் உள்ளிட்டோர் முக்கியமான கதாபாத்திரங்களில் நடிக்கிறார்கள். தளபதியின் 68ஆவது படமான ‘The Greatest of all Time’ படத்தின் படப்பிடிப்புக் காட்சிகள் ஹைதராபாத்தில் தீவிரமாக நடைபெற்று வந்தது. அதனைத் தொடர்ந்து தற்போது சென்னை கோவளத்தில் படப்பிடிப்புகள் நடைபெற்று வருகிறது.

கோவளத்தில் உள்ள இரண்டு வீடுகளில் மாறி மாறி படப்பிடிப்புகள் நடைபெற்று வருகிறது. மேலும், அங்குள்ள சாலைகளிலும் படப்பிடிப்புகள் எடுக்கப்பட்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. ஜனவரி 23ஆம் தேதி வரை கோவளத்தில் படப்பிடிப்பு நடைபெறவுள்ளதாகவும் கூறப்படுகிறது.

இந்த நிலையில், தற்போது நடிகர் விஜய் குறித்து ஒரு சுவாரசியமான அப்டேட் ஒன்று வெளியாகியுள்ளது. கோவளத்தில் ஷூட்டிங்கில் இருக்கும் விஜய் ஷூட்டிங்கை முடித்துவிட்டு வீட்டிற்கு செல்வதில்லையாம். கோவளம் பகுதியில் இருந்து அரைமணிநேரத்தில் நீலாங்கரை வீட்டுக்கு விஜய் எளிதில் போய்விடலாம்.

ஆனால், இயக்குநர் வெங்கட் பிரபு மற்றும் அவரது டீம்களுடன் சேர்ந்து அருகில் உள்ள ரிசார்ட்டிலேயே தங்கி, பார்ட்டி செய்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனைக் கேட்ட ரசிகர்கள் அதிர்ச்சியில் உள்ளனர்.

இதையும் படிங்க: ‘புளூ ஸ்டார்’, ‘தங்கலான்’ படங்கள் ரிலீஸ்.. பா.ரஞ்சித்திடம் கேள்வி எழுப்பிய ரசிகர்கள்!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here