இனிமேல் தமிழ் படங்களுக்கு நோ..! பாலிவுட்டுக்கு தாவும் விஜய் சேதுபதி?.. என்ன காரணம்?..

0
100

Actor Vijay Sethupathi: தமிழ் சினிமாவில் முன்னனி நடிகர்களுல் ஒருவர் நடிகர் விஜய் சேதுபதி. இவர், துணை நடிகராக இருந்து கதாநாயகனாக மாறியிருக்கிறார். ஹீரோ, வில்லன், தந்தை, மனநலம் பாதிக்கப்பட்டவர் என வித்தியாசமான கதாபாத்திரங்களில் நடித்து ரசிகர்களிடம் நல்ல வரவேற்பு பெற்றவர்.

தமிழ் மட்டுமில்லாமல் ஹிந்தி படங்களிலும் விஜய் சேதுபதி நடித்து வருகிறார். அந்த வகையில், நடிகர் விஜய் சேதுபதி மற்றும் கத்ரினா கைஃப் நடித்து திரைக்கு வரவுள்ள படம் ‘மெரி கிறிஸ்துமஸ்’. இந்தப் படத்தின் டிரைலர் சமீபத்தில் வெளியாகி மக்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது.

இந்தப் படம் ஜனவரி 12ஆம் தேதி திரைக்கு வரவுள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது. இந்த படத்தின் மீது நடிகர் விஜய் சேதுபதிக்கு மிகுந்த எதிர்பார்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.

ஏனென்றால், ஹிந்தி மொழியில் இந்த படம் வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பு கிடைத்தால் தமிழில் இருந்து தாவி ஹிந்தி மொழிப் படங்களில் நடிக்க ஆரம்பிக்கலாம் என எண்ணுவதாக கூறப்படுகிறது. தமிழ் சினிமாவை விட ஹிந்தியில் சம்பளம் அதிகம் கொடுப்பதால் இந்த முடிவை அவர் எடுத்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

இருந்தபோதிலும், அவரது ரசிகர்கள் தொடர்ந்து விஜய் சேதுபதி தமிழ் படங்களில் நடிப்பதை தான் விரும்புவார்கள். இது விஜய் சேதுபதிக்கும் தெரியும் ஆகையால் அவர் ஹிந்தி படங்களில் தொடர்ந்து நடிக்க ஆரம்பிப்பாரா என்பதைப் பொருத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

இதையும் படிங்க: விஜய் மீது காலணி வீசிய விவகாரம்..! காவல் நிலையத்தில் புகார்.. தீவிர விசாரணையில் போலீஸ்..!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here