விஜய்சேதுபதி பேச்சை வியந்து கேட்ட சத்யராஜ்..! நெகிழ்ச்சியில் கட்டி அணைப்பு..!

0
100

ஆர்.ஜே.பாலாஜி நடிப்பில் திரைக்கு வரவுள்ள ‘சிங்கப்பூர் சலூன்’ படத்தின் டிரைலர் வெளியீட்டு விழாவில் விஜய் சேதுபதி பேசிய பேச்சு சத்யராஜை நெகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

நடிகர் ஆர்.ஜே.பாலாஜி கதாநாயகனாக நடிக்கும் புதிய படம் ‘சிங்கப்பூர் சலூன்’. இந்த படத்தை ‘ரவுத்திரம்’, ‘இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா’, ‘காஷ்மோரா’ உள்ளிட்ட படங்களை இயக்கிய கோகுல் இயக்குகிறார்.

ஆர்.ஜே.பாலாஜி இந்த படத்தில் சிகை அலங்கார நிபுணராக நடித்திருக்கிறார். அவருடன் இந்த படத்தில் சத்யராஜ், லால், ரோபோ சங்கர், கிஷன் தாஸ் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

இந்தப் படத்தை வேல்ஸ் பிலிம் இண்டர்நேஷனல் நிறுவனம் சார்பில் ஐசரி கே.கணேஷ் தயாரிக்கிறார். இந்த படத்திற்கு சுகுமார் ஒளிப்பதிவு செய்கிறார். மேலும், விவேக் மெர்வின் இசையமைக்கிறார்.

இந்தப் படத்தின் டிரைலர் வெளியீட்டு விழா இன்று நடைபெற்றது. இதில், கலந்துகொண்ட நடிகர் விஜய் சேதுபதி பேசுகையில், ‘சத்யராஜ் சார் உங்களது நடிப்பை ரசித்திருக்கிறேன். உங்களது நடிப்பு, ரொமான்ஸ், சண்டைக் காட்சிகள் அனைத்தும் பிடிக்கும். உங்களை திரையில் பார்ப்பது அவ்வளவு மகிழ்ச்சியாக இருக்கிறது.

எனக்கு ரொம்ப நாள் ஆசை உங்களுடன் ஒரு படம் நடிக்க வேண்டும். இரண்டு பேரும் இணையாக ஒரு படம் நடிக்க வேண்டும். ஒரு நடிகரா எனக்கு உங்களுடைய அருமை தெரியும் உங்களை மிகவும் மதிக்கிறேன்” எனக் கூறினார்.

இதனைத் தொடர்ந்து மேடையில் அமர்ந்திருந்த சத்யராஜ், விஜய்சேதுபதியை கட்டி அணைத்து தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார்.

இதையும் படிங்க: ‘ஜல்லிக்கட்டு போட்டியில் வெற்றி பெற்றவருக்கு அரசுப் பணி வழங்க வேண்டும்’ – இயக்குநர் அமீர் கோரிக்கை..

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here