‘Mahan 2’: இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் நடிகர்கள் விக்ரம், துருவ் விக்ரம், பாபி சிம்ஹா, சிம்ரன் உள்ளிட்ட பலர் நடிப்பில் கடந்த 2022ஆம் ஆண்டு ஓடிடியில் வெளியான திரைப்படம் மகான்.
இந்த படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார். ‘மகான்’ திரைப்படம் வெளியாகி இரண்டு ஆண்டுகள் முடிவடைந்துள்ளது. இந்த நிலையில், தற்போது ‘மகான்’ திரைப்படத்தின் இரண்டாம் பாகம் உருவாக வாய்ப்பு இருப்பதாக தெரிகிறது.
இது குறித்த போஸ்டர் ஒன்றை நடிகர் விக்ரம் தனது ‘X’ தளத்தில் வெளியிட்டு அதில், ‘மகான் 2’ என குறிப்பிட்டு கேள்விக்குறியுடன் பதிவு செய்துள்ளார். ஆகையால், ‘மகான் 2’ திரைப்படம் உருவாக வாய்ப்பு இருப்பதாக சமூக வலைத்தளங்களி பேசப்பட்டு வருகிறது.
மேலும், ‘மகான்’ படம் ரிலீஸ் ஆகி இரண்டு ஆண்டிகள் நிறைவடைந்ததால் அதனை குறிப்பிடும் வகையில் ‘மகான் 2’ என குறிப்பிட்டுள்ளாரா என தெரியாமல் ரசிகர்கள் குழப்பத்தில் உள்ளனர்.