‘டைரி’ பட இயக்குநருடன் கை கோர்க்கும் விக்ராந்த்..!

0
109

Actor Vikranth: தமிழ் சினிமாவில் ‘கற்க கசடற’ படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமானவர் நடிகர் விக்ராந்த். நடிகர் தளபதி விஜய்யின் தம்பி என கூறி அறிமுகமானார். ஆரம்ப காலத்தில் இவர் நடித்து வெளிவந்த சில படங்கள் சரிவர ரசிகர்களிடம் சென்றடையவில்லை.

இதனைத் தொடர்ந்து, ‘கோரிப்பாளையம்’, ‘முத்துக்கு முத்தாக’, ‘பாண்டிய நாடு’ உள்ளிட்ட படங்களில் விக்ராந்தின் நடிப்பு மக்களால் பாராட்டப்பட்டது. ஆனால், அதன் பிறகும் விக்ராந்திற்கு சினிமாவில் படவாய்ப்பு கிடைக்கவில்லை.

இந்த நிலையில், பல வருடங்களுக்குப் பிறகு நடிகர் விக்ராந்த் தற்போது ‘லால் சலாம்’ படத்தில் கதாநாயகனாக நடித்திருக்கிறார். இந்த படத்தை தொடர்ந்து, ‘டைரி’ பட இயக்குநர் இன்னாசி பாண்டியன் இயக்கத்தில் விக்ராந்த் கதாநாயகனாக புதிய படத்தில் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

தற்போது இயக்குநர் இன்னாசி பாண்டியன் ‘புல்லட்’ படத்தின் படப்பிடிப்பில் இருப்பதால் இந்த படத்தைத் தொடர்ந்து, விக்ராந்தை வைத்து அடுத்த படத்தை இயக்க இருப்பதாக கூறப்படுகிறது. தொடர்ந்து, இந்த படத்தின் பணிகளை படக்குழு தீவிரமாக மேற்கொண்டு வருகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here