வெற்றிமாறனுடன் இணைந்த நடிகர் விமல் – போஸ்டர் வெளியிட்ட படக்குழு..!

0
110

MA.PO.SA: இயக்குநர் போஸ் வெங்கட் இயக்கத்தில் நடிகர் விமல் நடிக்கும் திரைப்படம் ‘மா.பொ.சி’. இந்த படத்தை எஸ்.எஸ்.எஸ் பிக்சர்ஸ் நிறுவனம் சார்பில் சிராஜ் தயாரிக்கிறார். இந்த படத்தின் பூகை கடந்த 2022ஆம் ஆண்டிலேயே தொடங்கப்பட்ட நிலையில் தொடர்ந்து படப்பிடிப்புகளும் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில் இந்த படத்தின் புதிய அறிவிப்பு ஒன்று வெளியாகியுள்ளது. அதன்படி, ‘மா.பொ.சி’ திரைப்படத்தை இயக்குநர் வெற்றிமாறனின் கிராஸ் ரூட் பிலிம் கம்பெனி (GrassRoot Film Company) வெளியிட இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

இது குறித்த அதிகாரபூர்வமான தகவலை படக்குழு போஸ்டர் மூலம் வெளியிட்டுள்ளது. இந்த போஸ்டர் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here