‘அரசியல் ஒரு துறை கிடையாது’ – விஷால்..!

0
151

Vishal Politics: நடிகர் விஜய், ‘தமிழக வெற்றி கழகம்’ என்ற பெயரில் அரசியல் கட்சி தொடங்கியுள்ளார். தளபதி விஜய்யை தொடர்ந்து புரட்சி தளபதி விஷாலும் அரசியலுக்கு வர இருப்பதாக கூறி அறிக்கையும் வெளியிட்டார்.

இந்த நிலையில் சென்னையில் நடிகர் விஷால் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார். அப்போது அவர் கூறியதாவது, “அரசியல் என்பது பொதுப்பணி. அது ஒரு சமூக சேவை. சினிமாத்துறை மற்றும் பிற துறைகளைப் போல் அரசியல் என்பது ஒரு துறை கிடையாது.

பொழுதுபோக்குக்காக வந்துவிட்டுப் போகும் இடமும் கிடையாது. மக்களுக்கு என்ன தேவையோ அதை செய்வதே அரசியல். தமிழ்நாட்டில் 2026ஆம் ஆண்டில் தேர்தல் வருகிறது. நான் அரசியலுக்கு வருகிறேன், வரவில்லை என்று சொல்வதற்கோ அல்லது மறைப்பதற்கோ எதுவுமில்லை.

அதேபோல் வருகிறேன் என்று சொல்லிவிட்டு வராமல் இருக்கவும் மாட்டேன். அந்த நேரத்தில், அந்த காலகட்டத்தில் என்ன முடிவு எடுக்கப்படுமோ அதுதான். நான் நடிகர் சங்க தேர்தலில் பொதுச்செயலாளர் ஆவேன் என நினைத்துக்கூட பார்த்தது கிடையாது.

ராதாரவிக்கு போட்டியாக நிற்பேன் என்றும் நினைத்தது கிடையாது. இது எல்லாம் அந்த காலகட்டத்தில் எடுக்கக்கூடிய முடிவுதான். எனவே அதற்கான நேரத்தில் இந்த கேள்விகளைக் கேட்டால் சரியானதாக பதில் கிடைக்கும்” என கூறியுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here