‘Follow பண்றியாடா பாடி சோடா’.. தளபதி பாணியில் புரட்சி தளபதி.. நெட்டிசன்கள் கலாய்..

0
100

Actor Vishal: தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி மாநிலங்களில் இன்று (ஏப்ரல் 19) ஒரே கட்டமாக 40 தொகுதிகளில் நாடாளுமன்ற தேர்தல் வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. அனைத்து வாக்குச் சாவடிகளிலும் பொதுமக்கள் ஆர்வமாக தங்களது ஜனநாயக கடமையை ஆற்றி வருகின்றனர்.

மேலும், அனைத்துக் கட்சித் தலைவர்களும், சினிமா பிரபலங்களும் தங்களது வாக்கினை செலுத்தி வருகின்றனர், அந்த வகையில், முதல் ஆளாக நடிகர் அஜித் சென்னை திருவான்மியூரில் உள்ள வாக்குச்சாவடியில் வாக்களித்தார்.

அதனைத் தொடர்ந்து நடிகர் ரஜினிகாந்த், கமல், தனுஷ், விஜய் சேதுபதி, விக்ரம், சசிகுமார், யோகி பாபு உள்ளிட்டோரும், நடிகைகள் திரிஷா, குஷ்பூ உள்ளிட்டோரும் தங்களது வாக்கினை செலுத்துவிட்டுச் சென்றனர்.

சமீபத்தில் சென்னை நீலாங்கரை புனித தோமையார்மலை ஊ.ஒ. பள்ளி வாக்குச்சாவடியில் தமிழக வெற்றிக் கழக தலைவரும் நடிகருமான விஜய் வாக்களித்தார். இந்நிலையில், தற்போது சென்னை அண்ணாநகரில் உள்ள வாக்குச்சாவடியில் நடிகர் விஷால் வாக்களித்தார்.

அப்போது, சைக்கிளில் வந்து விஷால் வாக்களித்தூர். கடந்த தேர்தலின் போது தளபதி விஜய் சைக்கிளில் சென்று வாக்கு செலுத்தினார். அதே பாணியில் தற்போது புரட்சித் தளபதியும் சைக்கிளில் சென்று வாக்கு செலுத்தியுள்ளார்.

இதனைப் பார்த்த நெட்டிசன்கள் தளபதியை Follow பண்ணுகிறார் புரட்சி தளபதி என இணையத்தில் விஷாலை ரோஸ்ட் செய்து வருகின்றனர். தற்போது விஷால் சைக்கிளில் வந்த விஷாலின் வீடியோ மற்றும் புகைப்படங்கள் வைரலாகி வருகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here