‘கட்டாயம் அரசியலில் ஜெயித்து காட்டுவார்’ – விஷாலின் தந்தை ஜி.கே.ரெட்டி!

0
143

Actor Vishal Politics: நடிகர் விஜய், ‘தமிழக வெற்றி கழகம்’ என்ற பெயரில் அரசியல் கட்சி தொடங்கியுள்ளார். தளபதி விஜய்யை தொடர்ந்து புரட்சி தளபதி விஷாலும் அரசியலுக்கு வர இருப்பதாக கூறி அறிக்கையும் வெளியிட்டார்.

இந்த நிலையில் விஷாலின் தந்தையும், தயாரிப்பாளருமான ஜி.கே.ரெட்டி விஷால் அரசியல் குறித்து பேசுகையில், “விஷாலுக்கு சிறிய வயதில் இருந்தே ஏழைகளுக்கு உதவி செய்யும் எண்ணம் இருக்கிறது. தன்னிடத்தில் பணம் இல்லை என்றாலும் கூட கடன் வாங்கி மற்றவர்களுக்கு உதவி செய்வார்.

தற்போது தனது தாயார் தேவியின் பெயரில் அறக்கட்டளை தொடங்கி ஏழை மாணவர்களுக்கு உதவி செய்து வருகிறார். அவரது ரசிகர் மன்றத்தை அரசியல் இயக்கமாக மாற்றும் எண்ணத்தில் இருக்கிறார். கண்டிப்பாக விஷால் அரசியலுக்கு வருவார். அரசியலில் ஜெயித்து காட்டுவார்.

அதேசமயம் அரசியலுக்கு வருவதற்கு முன்பு விஜய், அஜித், சூர்யா போன்று நிறைய சம்பாதிக்க வேண்டும். திருமணம் செய்து செட்டில் ஆக வேண்டும். அதன் பிறகு, சம்பாதித்த பணத்தை வைத்து அரசியலுக்கு வந்து மக்களுக்கு சேவை செய்ய வேண்டும்; இதுதான் என்னுடைய ஆசை” என்றார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here