‘ஓட்டுப்போட சைக்கிளில் சென்றதற்கு இதுதான் காரணம்’ – விஷால் 

0
62

‘Rathnam’ : இயக்குநர் ஹரி இயக்கத்தில் நடிகர் விஷால் நடிக்கும் திரைப்படம் ‘ரத்னம்’. தாமிரபரணி, பூஜை படங்களுக்கு பிறகு இருவரும் இணையும் மூன்றாவது படம் இதுவாகும். இது விஷாலின் 34ஆவது படமாகும். இந்தப் படத்தில் விஷாலுக்கு ஜோடியாக பிரியா பவானி சங்கர் நடிக்கிறார்.

மேலும், கவுதம் வாசுதேவ் மேனன், சமுத்திரக்கனி, யோகிபாபு உள்ளிட்ட பல முன்னனி நடிகர்கள் நடிக்கின்றனர். இந்தப் படத்தை ஜீ ஸ்டூடியோஸ் சவுத் மற்றும் ஸ்டோன்பெஞ்ச் ஃபிலிம்ஸ் நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கின்றன.

‘ரத்னம்’ படம் வருகிற ஏப்ரல் 26ஆம் தேதி ரிலீஸாகவுள்ளது. மிரட்டலாக வெளியான இந்த டிரைலர் ரசிகர்களிடம் ரீச்சான நிலையில் படத்தின் ரிலீஸை எதிர்பார்த்து ரசிகர்கள் காத்திருக்கின்றனர்.

இதற்காக தொடர்து ‘ரத்னம்’ படக்குழு புரொமோஷன் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். அந்த வகையில் இன்று தனியார் கல்லூரியில் நிகழ்ச்சி நடைபெற்றது. அப்போது, “வாக்குப் பதிவுக்கு சைக்கிளில் சென்று வாக்களித்தற்கு விஜய்யின் இன்ஸ்பிரேஷன் தான் காரணமா? என மாணவர் ஒருவர் கேள்வி எழுப்பினார்.

அதற்கு பதிலளித்த விஷால், “விஜய்யை பொறுத்தவரை அவருடைய தன்னம்பிக்கை எனக்கு பிடிக்கும். சைக்கிளில் போனதற்கு காரணம், விஜய்யின் இன்ஸ்பிரேஷன் கிடையாது. என்னிடம் வாகனம் எதுவும் இல்லை. வீட்டில் அப்பா, அம்மாவிடம் இருக்கிறது; என்னுடைய வாகனத்தை விற்றுவிட்டேன். 

இன்றைக்கு இருக்கும் ரோடு கண்டிஷனைப் பார்த்தால் வாகனம் சேதமடைந்துவிடும் அதற்காக பணத்தை செலவு செய்யமுடியாது, என்னிடம் காசும் இல்லை.  அதனால் சைக்கிள் வாங்கினால் ட்ராஃபிக் இல்லாமல் சீக்கிரம் சென்றுவிடலாம் என சைக்கிள் வாங்கினேன். அதில், வாக்களிக்கச் சென்றேன்” என்றார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here