‘மோடி ஐயா உங்களுக்கு எனது சல்யூட்’ – ராமர் கோவில் திறப்பிற்கு வாழ்த்து கூறிய நடிகர் விஷால்..!

0
84

‘Actor Vishal Thanked PM Modi’: உத்திரப் பிரதேச மாநிலம் அயோத்தியில் ராமர் கோவில் பிராண பிரதிஷ்டை விழா இன்று பிரமாண்டமாக நடைபெற்றது. இந்த நிகழ்வில், இந்தியாவில் உள்ள முக்கிய பிரபலங்கள், திரை நட்சத்திரங்கள், விளையாட்டு பிரபலங்கள் என ஏராளமானோர் பங்கேற்றனர்.

அயோத்தி ராமர் கோவில் கருவறை பால ராமர் பிரதிஷ்டைக்குப் பின்னர் பொதுமக்கள் வழிபாட்டிற்காக திறக்கப்பட்டது. பால ராமர் பிரதிஷ்டையை தொடர்ந்து பிரதமர் மோடி முதலில் தீப ஆராதனை காட்டி வழிபாடு நடத்தினார்.

இந்த நிலையில் பிரதமர் மோடியை பாராட்டி ‘இது உங்களின் மற்றொரு சாதனை’ என நடிகர் விஷால் தனது ‘X’ தளத்தில் பதிவு வெளியிட்டுள்ளார். அதில், ‘அன்பிற்குரிய பிரதமர் மோடியின் மற்றொரு சாதனை இது. உங்களுக்கு எனது வாழ்த்துகள். ஜெய் ஸ்ரீராம்.

ராமர் கோவில் இன்னும் பல ஆண்டுகள் நினைவுகூரப்படும். இந்த தருணத்திற்காக உயிர்த் தியாகம் செய்த அனைவருக்கும் தலைமுறை தலைமுறைகளாக இங்கு வந்து, அஞ்சலி செலுத்துவார்கள். உங்களுக்கு எனது சல்யூட் கடவுள் ஆசிர்வதிக்கட்டும்’ என குறிப்பிட்டுள்ளார்.

இதையும் படிங்க: ‘என்னது.. நான் சௌந்தர்யாவை போல இருக்கேனா?..’ – ராஷ்மிகா மந்தனா!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here