‘லால் சலாம்’ படம் எனக்கு ஒரு பரிசாக கிடைத்திருக்கிறது – விஷ்ணு விஷால்..!

0
81

Actor Vishnu Vishal: ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் உருவாகி திரைக்குவர இருக்கும் திரைப்படம் ‘லால் சலாம்’. இந்த படம் கிரிக்கெட்டை மையமாக வைத்து உருவாக்கப்பட்டுள்ளது. இந்த திரைப்படத்தில் விக்ராந்த், விஷ்ணு விஷால் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

மேலும், இந்த படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடிகர் ரஜினிகாந்த், முன்னாள் கிரிக்கெட் வீரர் கபில்தேவ் ஆகியோர் நடித்துள்ளனர். இந்த படம் தொடர்பான நிகழ்ச்சி சமீபத்தில் நடந்தது. இதில், நடிகர் விஷ்ணு விஷால் கலந்துகொண்டார்.

அப்போது பேசிய அவர், “திரைத்துறையில் 15 ஆண்டுகளை நிறைவு செய்த தருணத்தில் இந்த படம் எனக்கு ஒரு பரிசாக கிடைத்திருக்கிறது. ரஜினிகாந்த் சாருடன் பலரும் நடிக்க ஏங்கிக் கொண்டிருக்கின்றனர்.

அப்போது அவர் நடிக்கும் படத்தில் அவர் அவருக்கு கீழ் ஒரு கதையின் நாயகனாக நடித்தது எனக்கு மிகவும் மகிழ்ச்சியாகவுள்ளது. இந்த காலக்கட்டத்திற்குத் தேவையான கருத்தை கிரிக்கெட் விளையாட்டு மூலமாக இப்படம் பதிவு செய்திருக்கிறது.

ஒரு இயக்குநராக இந்த கருத்தை படமாக்குவதும் அந்த படத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் போன்ற மிகப்பெரிய ஆளுமை இருப்பதும் மிகுந்த சவால் அளிக்கும் விஷயம். இதனை ஐஸ்வர்யா ரஜினிகாந்த் திறம்பட செய்து முடித்துள்ளார்” என்றார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here