‘Abhirami’: ஏஐ தொழில்நுட்பத்தின் மூலம் உருவாக்கப்படும் சினிமா நடிகைகளின் டீப் பேக் வீடியோக்கள் அதிகமாக வெளியாகி பரவி வருகிறது. சமீபத்தில் ராஷ்மிகா மந்தனா, கத்ரினா கைப், ஆலியா பட், கஜோல் ஆகியோரின் போலியான ஆபாச வீடியோக்கள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தின.
இந்த நிலையில், தற்போது நடிகை அபிராமி வெங்கடாசலத்தின் டீப் பேக் வீடியோவும் வெளியாகி இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. அதில் அவர் நிர்வாணமாக சித்தரிக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. இதனைக் கண்டு அதிர்ச்சியடைந்த அபிராமி இன்ஸ்டாவில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அதில், “நான் சந்தித்த மோசமான மனிதர்களுக்கு கூட இப்படி நடக்க கூடாது. இதன் மூலம் யாரையும் மோசமாக காட்டலாம் என்ற நிலைமை பெரும் அச்சத்தை ஏற்படுத்துகிறது.
இதுபோன்ற வீடியோவை உருவாக்கியவன் குற்றவாளி என்றால் அதை பகிர்ந்து சந்தோஷப்படுபவர்கள் பெரிய குற்றவாளிகள். இவர்களுக்கு கட்டாயம் தண்டனை கிடைக்கும். நான் தைரியசாலி எனது வலிமையை தகர்க்க முடியாது.
பெண்களின் நிர்வாண வீடியோக்களை பார்ப்பவர்களுக்கு என்ன மகிழ்ச்சி கிடைக்கிறது என புரியவில்லை” என குறிப்பிட்டுள்ளார். இந்த பதிவிற்கு ரசிகர்கள் பலரும் தங்களது ஆதரவை தெரிவித்து வருகின்றனர்.
இதையும் படிங்க: ‘கேம் சேஞ்சர்’ ரிலீஸ் ஆவதில் சிக்கல்.. ஷங்கரை வச்சு செய்யும் ராம் சரண் ரசிகர்கள்..!