Actress Amala Paul : தமிழ் சினிமாவில் ‘மைனா’ திரைப்படத்தின் மூலம் அறிமுகமானவர் அமலா பால். தொடர்ந்து பல படங்களில் நடித்து தனக்கென ஒரு ரசிகர் கூட்டத்தை உருவாகியுள்ளார்.
இவருக்கும், இயக்குநர் ஏ.எல்.விஜய்க்கும் கடந்த 2014ஆம் ஆண்டு திருமணம் நடைபெற்றது. பின்னர் அவர்களுக்குள் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக 2017 ஆம் ஆண்டு விவாகரத்து செய்தார்.
அதனைத் தொடர்ந்து, 2023ஆம் ஆண்டு நீண்ட நாள் நண்பனான ஜெகத் தேசாய் என்பவரை திருமணம் செய்து கொண்டார். நடிகை அமலா பால் தற்போது கர்ப்பமாக இருக்கிறார்.
இந்த சூழ்நிலையில் மகா சிவராத்திரி விழாவை முன்னிட்டு, கோயம்புத்தூர் ஈஷா மையத்தில் தனது கணவரோடு இணைந்து சாமி தரிசனம் செய்துள்ளார். தற்போது இது குறித்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.