அமலா பாலுக்கு நடந்து முடிந்த வளைகாப்பு..

0
125

Actress Amala Paul : தமிழ் சினிமாவில் ‘மைனா’ திரைப்படத்தின் மூலம் அறிமுகமானவர் அமலா பால். தொடர்ந்து பல படங்களில் நடித்து தனக்கென ஒரு ரசிகர் கூட்டத்தை உருவாகியுள்ளார்.

இவருக்கும், இயக்குநர் ஏ.எல்.விஜய்க்கும் கடந்த 2014ஆம் ஆண்டு திருமணம் நடைபெற்றது. பின்னர் அவர்களுக்குள் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக 2017 ஆம் ஆண்டு விவாகரத்து செய்தார்.

அதனைத் தொடர்ந்து, 2023ஆம் ஆண்டு நீண்ட நாள் நண்பனான ஜெகத் தேசாய் என்பவரை திருமணம் செய்து கொண்டார். நடிகை அமலா பால் தற்போது கர்ப்பமாக இருக்கிறார்.

இந்த நிலையில், தற்போது நடிகை அமலா பாலுக்கு வளைகாப்பு நடந்துதுள்ளது. இந்த நிகழ்ச்சி கேரளாவில் அவர்களது குடும்பத்தினர் முன்னிலையில் பாரம்பரிய முறைப்படி நடைபெற்றது. இந்த வளைகாப்பு விழாவில் இருக்கும் அமலா பால் புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here