நீதிமன்றத்தில் சரணடைந்த நடிகை ஜெயப்பிரதா..!

0
150

‘Jaya Prada’: தமிழில் ‘சலங்கை ஒலி’ படத்தின் மூலம் பிரபலமான நடிகை ஜெயப்பிரதாவை காவல் துறையினர், தீவிரமாக தேடி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்திய சினிமாவில் பிரபலமான நடிகையாக இருந்தவர் ஜெயப்ரிதா. இவர், 80ஸ் காலகட்டத்தில் தமிழ் சினிமாவின் முன்னணி கதாநாயகிகளுள் ஒருவராக திகழ்ந்து வந்தவர் நடிகை ஜெயப்பிரதா.

இவர் தமிழில் மன்மத லீலை, நினைத்தாலே இனிக்கும், சலங்கை ஒலி, தசாவதாரம் போன்ற படங்களில் நடித்துள்ளார். இவர், தமிழ், இந்தி, மலையாளம், கன்னடம் எனப் பல்வேறு மொழிப் படங்களில் நடித்து இருக்கிறார்.

மேலும், இவருக்கு தமிழ் ரசிகர்களை விட தெலுங்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு உள்ளது. ஒரு கட்டத்தில் அவருக்கு பட வாய்ப்புகள் குறையத் தொடங்கின. அதனைத் தொடர்ந்து அவர் அரசியலில் கால் பதித்தார். பின் இவர் ராஜ்யசபா உறுப்பினராகவும் பணியாற்றி இருந்தார். அதன் பிறகு உத்திரப் பிரதேசத்தின் சமாஜ்வாடி கட்சியில் சேர்ந்தார்.

பின்னர், ஜெயப்பிரதா ராம்பூர் மக்களவை உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டார். அதன் பிறகு 2019 ஆம் ஆண்டு அவர் பாஜகவில் இணைந்தார். அதன் பிறகு உத்திரப் பிரதேசத்தில் உள்ள ராம்பூர் மக்களவையில் போட்டியிட்டு இவர் தோல்வியும் பெற்றார்.

ஆனால், 2019 ஆம் ஆண்டு தேர்தல் நடைபெறும் முன் விதி மீறல் செய்ததாக இவர் மீது குற்றம் சாட்டப்பட்டிருந்தது. இது தொடர்பாக ஜெயப்பிரதா மீது வழக்கும் பதிவு செய்யப்பட்டது. அதனைத் தொடர்ந்து, இந்த வழக்கு குறித்து ஜெயப்பிரதா ஆஜராக வேண்டும் என நீதிமன்றம் உத்தரவிட்டது. ஆனால், ஜெயப்பிரதா நீதிமன்றத்தில் ஆஜராகவில்லை.

இந்த நிலையில் ஜெயப்பிரதாவுக்கு ஜாமினில் வெளியே வர முடியாத அளவுக்கு பிடிவாரண்ட் போடப்பட்டது. ஆகையால், ஜனவரி 10ஆம் தேதிக்குள் ஜெயப்பிரதாவை ஆஜர் படுத்துமாறு நீதிமன்றம் காவல் துறையினருக்கு உத்தரவிட்டது.

மேலும், இந்த வழக்கு தொடர்பாக நீதிமன்றத்தில் ஆஜராகும்படி ஜெயப்பிரதாவுக்கு 7 முறை சம்மன் அனுப்பட்டது. இருந்தபோதிலும் அவர் நீதிமன்றத்தில் ஆஜராகவில்லை.

இதனைத் தொடர்ந்து, ஜெயப்பிரதாவை தலைமறைவான குற்றவாளி என நீதிமன்றம் அறிவித்து, அவரை கைது செய்யும்படி காவல் துறையினருக்கு பிடிவாரண்ட் பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், பிடிவாரண்ட்டை ரத்து செய்யும்படி நீதிமன்றத்தில் ஜெயப்பிரதா தாக்கல் செய்த மனுவை நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. இதன் காரணமாக நடிகை ஜெயப்பிரதா நீதிமன்றத்தில் சரணடைந்தார். இதனையடுத்து அவருக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கப்பட்டது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here