Actress Anjali: தமிழ் சினிமாவில் 2007ஆம் ஆண்டு வெளியான ‘கற்றது தமிழ்’ படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானவர் நடிகை அஞ்சலி. அதனைத் தொடர்ந்து அவர் பல படங்களில் நடித்து வந்தார். தமிழ் சினிமா மட்டுமின்றி தெலுங்கு சினிமாவிலும் நடித்து வந்தார்.
அதன் பின்னர் அஞ்சலி உடல் எடை அதிகரித்ததால் அவருக்கு பட வாய்ப்புகள் வரவில்லை. இதனைத் தொடர்ந்து, சினிமாவை விட்டு விலகிய அஞ்சலி உடல் எடையை குறைத்து மீண்டும் சினிமாவில் நுழைந்தார்.
தெலுங்கில் வெளியான ‘மச்சர்ல நியோஜகவர்கம்’ படத்தில் வரும் ‘ரா ரா ரெட்டி – ஐ அம் ரெடி’ என்ற பாடலில் நடனமாடி மீண்டும் சினிமாவில் எண்ட்ரி கொடுத்தார். தற்போது சினிமாவில் பிசியாக அவர் வலம் வந்து கொண்டிருக்கிறார்.
தற்போது அவர் ‘கேம் சேஞ்சர்’, ‘ஏழு கடல் ஏழு மலை’ போன்ற படங்களில் நடித்து வருகிறார். முன்னதாக நடிகை அஞ்சலியும் ஜெய்யும் காதலித்து திருமணம் செய்யப்போவதாகவும் பின்னர் பிரேக் அப் ஆனதாகவும் செய்திகள் வெளியானது.
இந்நிலையில், இது குறித்து நடிகை அஞ்சலி ஒரு நேர்காணில் வெளிப்படையாக பேசியிருக்கிறார். அதில், “சினிமாவில் எனக்கு நிறைய நண்பர்கள் இருக்கிறார்கள். என்னைப்பற்றி என்ன எழுத வேண்டும், யாருடன் இணைத்து எழுத வேண்டும் என அவர்களே முடிவு செய்துவிடுகின்றனர்.
முதலில் நான் நடிகர் ஜெய்யை காதலித்ததாக செய்தி வந்தது. பின்னர் தொழிலதிபரை திருமணம் செய்யப்போவதாகவும், அமெரிக்காவில் செட்டில் ஆகப்போவதாகவும் செய்திகள் வெளியாகின. எனக்கே தெரியாமல் எனக்கு திருமணம் ஆனதை நினைத்து நான் சிரித்தேன்” என்றார்.
இதையும் படிங்க: ‘சிக்ஸு.. சிக்ஸு..’ நடிகர் விஜய் கிரிக்கேட் விளையாடும் வீடியோ..!