வைரலான ஆபாச வீடியோ..! தற்கொலைக்கு முயன்ற அனுயா..! நடந்தது என்ன?

0
143

தமிழ் சினிமாவில் ‘சிவா மனசுல சக்தி’ படத்தின் மூலம் அறிமுகமானவர் நடிகை அனுயா. இவர், தொடர்ந்து மதுரை சம்பவம், நகரம், நண்பன் போன்ற படங்களில் நடித்திருந்தார்.

இந்த நிலையில், நடிகை அனுயாவின் மார்பிங் செய்யப்பட்ட ஆபாச வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரலாகி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

2017ஆம் ஆண்டு பின்னணி பாடகி சுசித்ராவின் எக்ஸ் வலைதள பக்கத்தை ஹேக் செய்த மர்ம நபர்கள் சினிமா நட்சத்திரங்கள் தொடர்பான சர்ச்சைக்குரிய படங்களை வெளியிட்டனர்.

அதில் நடிகை அனுயாவின் மார்பிங் செய்யப்பட்ட ஆபாச வீடியோவும் வெளியானது. இது அப்போது மிகப்பெரிய சர்ச்சையை ஏற்படுத்தியது. இதனையறிந்த நடிகை அனுயா தற்கொலை முயற்சியில் ஈடுபட்டிருக்கிறார்.

சமீபத்தில் நேர்காணில் கலந்துகொண்ட அனுயா இது குறித்து வெளிப்படையாக பேசியிருக்கிறார். “சில ஆண்டுகளுக்கு முன்பு இணையத்தில் என்னைப் பற்றி மார்பிங் வீடியோ வெளியானது.

இதனால், நான் மிகுந்த மன வேதனைக்கு ஆளானேன். அந்தப் பிரச்சினையை நான் எப்படி எதிர்கொண்டேன் என எனக்கு தெரியவில்லை. அந்த சமயத்தில் எனக்கு தற்கொலை செய்துகொள்ளும் எண்ணம் கூட வந்தது.

ஆனால், எனது குடும்பம் தான் என்னுடைய அந்த எண்ணத்தை மாற்றியது. அவர்கள் என்னுடன் அப்போது இல்லை என்றால் நான் இந்த நேரம் உயிருடன் இருந்திருக்க மாட்டேன்” என தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க: மலை உச்சியில் ப்ரொபோஸ் செய்த காதலர்..! வைரலாகும் எமி ஜாக்சன் நிச்சயதார்த்த புகைப்படம்..!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here