விபத்தில் சிக்கிய நடிகர் அருந்ததி நாயர்..! உயிருக்கு போராடுவதாக தகவல்..!

0
110

Actress Arundhati: தமிழ் சினிமாவில் விஜய் ஆண்டனியுடன் ‘சைத்தான்’, ‘கன்னிராசி’, ‘ஆயிரம் பொற்காசுகள்’, ‘யாவரும் வல்லவரே’ உட்பட சில படங்களில் நடித்தவர் அருந்ததி நாயர். தொடர்ந்து, மலையாளப் படங்களிலும் அவர் நடித்து வருகிறார். தற்போது கேரளாவில் உள்ள திருவனந்தபுரத்தில் வசித்து வருகிறார்.

இவர், கடந்த மார்ச் 14ஆம் தேதி இரவு, கோவளம் பைபாஸ் சாலையில் தனது சகோதரருடன் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தனர். அப்போது, இவர்கள் மீது அடையாளம் தெரியாத வாகனம் ஒன்று மோதிவிட்டு நிற்காமல் சென்றது.

இந்த விபத்தில் இருவரும் படுகாயமடைந்தனர். மேலும், ஒரு மணிநேரமாக ரத்த வெள்ளத்தில் அங்கேயே இருந்ததாக கூறப்படுகிறது. பின்னர் சாலையில் சென்றவர்கள் பார்த்து இருவரையும் மீட்டு தனியார் மருத்துவமனையில் சேர்ந்ததாக தெரிகிறது.

இது குறித்து அருந்ததி நாயரின் சகோதடி ஆரத்தி நாயர் கூறுகையில், “ மூன்று நாட்களுக்கு முன்பு எனது சகோதரிக்கு விபத்து ஏற்பட்டது. இதில் பலத்த காயம் அடைந்த அவர், மருத்துவமனையில் வென்டிலேட்டர் உதவியுடன் உயிருக்குப் போராடி வருகிறார்” என தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here