Actress Hansika: இயக்குநர் சபரி மற்றும் குருசரவணன் இயக்கத்தில், நடிகை ஹன்சிகா பேயாக நடித்துள்ள படம் ‘கார்டியன்’. இந்த படத்தில் சுரேஷ் மேனன், ஸ்ரீமன், மொட்டை ராஜேந்திரன், பிரதீப் ராயன், தங்கதுரை உள்ளிட்ட பல நடிகர்கள் நடித்துள்ளனர்.
இந்த படத்திற்கு சாம்.சி.எஸ் இசையமைத்துள்ளார். இந்த படத்தின் டீசர் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் ரிலீஸானது. இந்த டீசரை நடிகர் விஜய் சேதுபதி வெளியிட்டார்.
அதனைத் தொடர்ந்து வெளியான டிரைலருக்கும் ரசிகர்கள் நல்ல வரவேற்பு கொடுத்தனர். திகிலூட்டும் வகையில் உருவாகியுள்ள இந்த ‘கார்டியன்’ படம் நாளை (மார்ச் 8) ரிலீஸாக உள்ளது.
அதற்கான புரோமோஷன்கள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. ப்ரோமோ வீடியோக்கள், போஸ்டர்கள் என அடுத்தடுத்து சமூக வலைத்தளங்களில் டிரெண்டாகி வருகின்றன.
இந்த நிலையில் தற்போது நடிகை ஹன்சிகா தனது ‘X’ தளத்தில் ‘கார்டியன்’ படத்தின் இரண்டாவது டீசரை பகிர்ந்துள்ளார். யூடியூப்பில் வெளியான இந்த டீசருக்கும் ரசிகர்கள் நல்ல வரவேற்பு கொடுத்து வருகின்றனர்.
திகிலூட்டும் வகையில் அமைந்துள்ள இந்த ஹாரர் படத்தில் ஹன்சிகாவின் நடிப்பு ரசிகர்களை பயமுறுத்தும் வகையில் அமைந்துள்ளது. தொடர்ந்து, வெளியான டீசர், டிரைலர்களுக்கு ரசிகர்கள் வரவேற்பு கொடுத்துள்ளனர்.
மேலும், இந்த படத்தின் ரிலீஸுக்காக ஆவலுடன் காத்திருக்கின்றனர். காமெடி கலந்த இந்த திகிலூட்டும் ‘கார்டியன்’ படம் குழுந்தைகளுக்கு பிடிக்கும் வண்ணம் உருவாகியுள்ளது.