‘ராமரை வழிபடுவது நமக்கு கிடைத்த பாக்கியம்’ – கங்கனா ரனாவத்!

0
80

உத்தரப் பிரதேச மாநிலம் அயோத்தியில் கட்டப்பட்டுள்ள ராமர் கோவிலின் கும்பாபிஷேக விழா நாளை (ஜனவரி 22) நடைபெற உள்ளது. இந்த விழாவில் பிரதமர் மோடி உள்பட பல முக்கிய தலைவர்கள் மற்றும் திரைப்பிரபலங்கள் கலந்து கொள்ளவுள்ளனர்.

இந்த விழாவில் பங்கேற்க பாலிவுட் திரையுலகின் முன்னணி நடிகையாக வலம் வருபவர் கங்கனா ரனாவத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், இது குறித்து கங்கனா ரனாவத் செய்தியாளர்களை சந்தித்துப் பேசினார்.

அப்போது பேசிய அவர், “அயோத்தி ராமர் கோவிலுக்கு வருகை தரும் மக்கள், நிறைய புண்ணியங்களைப் பெறுகிறார்கள். வாடிகன் நகரத்திற்கு உலக அளவில் முக்கியத்துவம் உள்ளதைப் போல, அயோத்தி ராமர் கோவிலும் நமக்கு முக்கியமானது.

அயோத்திக்கு வந்து ராமரை வழிபடுவது நமக்கு கிடைத்த பாக்கியம். ராமரின் கோவிலுக்கு ‘துர்புத்தி’ உள்ள சிலர் வரவில்லை. ஜனவரி 22ஆம் தேதி ‘ராமராஜ்யம்’ மீண்டும் நிறுவப்படும்” எனத் தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க: பிரசாந்த் நீல் இயக்கத்தில் நடிகர் அஜித்..! ரசிகர்களுக்கு கன்பார்ம் ட்ரீட்..!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here