Actress Kasthuri : நடிகர் விஜய் ‘தமிழக வெற்றி கழகம்’ என்ற கட்சியின் பெயரை வெளியிட்டுள்ளார். இதற்கான அறிக்கையும் விஜய் வெளியிட்டுள்ளார். தேர்தல் ஆணையம் அங்கீகாரம் வழங்கியதும் கட்சியின் கொடி, சின்னம் அறிவிக்கப்படும் என்று அவர் தெரிவித்துள்ளார்.
இந்த நிலையில், நடிகர் விஜய்யின் அரசியல் வருகைக்கு பல்வேறு கட்சித் தலைவர்களும், ரசிகர்களும் ஆதரவும் தங்களது வாழ்த்துகளையும் தெரிவித்து வருகின்றனர். மேலும், பல திரைத்துறை பிரபலங்கள் தங்களது கருத்துக்களையும் தெரிவித்து வருகின்றனர்.
இந்த நிலையில், விஜய் அரசியல் குறித்து நடிகை கஸ்தூரி ஒரு பேட்டி கொடுத்திருக்கிறார். அதில், “தளபதி விஜய் அவர்களுடைய அரசியல் வருகை எதிர்பார்த்த ஒன்றுதான். காவி கொள்கை உள்ளவர்கள் பாஜகவிற்கு தான் ஓட்டு போடுவார்கள்.
அவர்கள் ஜோசப் விஜய்க்கு ஓட்டு போட மாட்டார்கள். அதேபோல மைனாரிட்டி மக்கள் திமுகவுக்கு தான் ஓட்டு போடுவார்கள்” உள்ளிட்ட பல கருத்துகளைத் தெரிவித்திருந்தார்.
இந்த பேட்டியில் கஸ்தூரி, ஜோசப் விஜய் என குறிப்பிட்டு பேசியது பெரும் சர்ச்சைகளை ஏற்படுத்தியது. இது தொடர்பாக ட்விட்டர் பயனர் ஒருவர் கஸ்தூரியின் அந்த கருத்திற்கு கடுமையான கண்டனம் தெரிவித்திருந்தார். இதற்கு பதில் அளிக்கும் விதமாக நடிகை கஸ்தூரி ஒரு பதிவு வெளியிட்டுள்ளார்.
அதில், “விஜய்யை ஜோசப் என குறிப்பிடும் கட்சியினர் அவருக்கு வாக்களிக்க மாட்டார்கள் என்ற அரசியல் உண்மையை சொல்லியிருக்கேன். என் சொந்த கருத்தை அல்ல. திமுக கூட்டணிக்கு பாதிப்புன்னு சொன்ன உடனே உ.பி கழிசடைங்க எப்படியெல்லாம் மூட்டி விடுதுங்க பாரேன். பொய்யை மட்டும் தான் பேசுவீங்களாடா?” என குறிப்பிட்டுள்ளார்.