Actress Meena: தமிழ் சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக இருந்து பிரபல கதாநாயகியாக வலம் வந்தவர் நடிகை மீனா. இவர் கடந்த 2009ஆம் ஆண்டு பெங்களூருவைச் சேர்ந்த வித்யாசாகர் என்பவரை திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதிக்கு நைனிகா என்ற மகள் இருக்கிறார்.
இதற்கிடையே மீனாவின் கணவர் 2022ஆம் ஆண்டு உடல்நலக்குறைவு காரணமாக உயிரிழந்தார். இதனால் மன உளைச்சலில் இருந்த மீனா சிறிது காலம் வெளியே வராமல் இருந்தார். இந்த நிலையில், தற்போது தொலைக்காட்சி மற்றும் சினிமாக்களில் தனது பணியை தொடங்கியுள்ளார்.
இந்த நிலையில், தற்போது நடிகை மீனா நடிகர் ஒருவரை திருமணம் செய்துகொள்ள இருப்பதாக சமூக வலைதலங்களில் வதந்தி பரவியது. இதற்கு கண்டனம் தெரிவிக்கும் விதமாக மீனா, “சமூக வலைதலங்களில் உண்மைகளை மட்டும் சொல்லுங்கள்.
அதுதான் நல்லது. நாட்டில் என்னைப் போல் தனிமையில் வாழும் பெண்கள் பலர் இருக்கின்றனர். அந்த பெண்களின் பெற்றோர், குழந்தைகள் குறித்து சிந்தித்துப் பாருங்கள். இப்போது வரை எனக்கு இரண்டாவது திருமணம் குறித்து எந்த யோசனையும் இல்லை.
எதிர்கால முடிவு குறித்து இப்போது என்ன சொல்ல முடியும். எனது 2ஆவது திருமணம் குறித்து சமூக வலைதளங்களில் வெளியாகும் வதந்திகளை யாரும் நம்ப வேண்டாம்” என தெரிவித்தார்