‘ஜெயிலர் 2’..! மாஸ் அப்டேட்டை கொடுத்த மிர்னா மேனன்..!

0
139

‘Jailer 2’: நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் நெல்சன் இயக்கத்தில் வெளியாகி மெகா ஹிட்டான திரைப்படம் ‘ஜெயிலர்’. இந்த திரைப்படத்தில் மோகன்லால், சிவராஜ்குமார், ஜாக்கி ஷெராப் என பான் இந்தியா நட்சத்திரங்கள் நடித்திருந்தனர்.

இந்த திரைப்படம் உலக அளவில் சுமார் 615 கோடி ரூபாய்க்கு மேல் வசூலித்து. இதனால், 2023ஆம் ஆண்டில் அதிக வசூல் செய்த இரண்டாவது தமிழ் திரைப் படம் என்ற பெயர் கிடைத்தது.

இந்த நிலையில், நடிகர் ரஜினிகாந்த் ‘ஜெயிலர்’ படத்தின் இரண்டாம் பாகம் எடுக்க நெல்சனுக்கு யோசனை கொடுத்ததாகவும் அதன் பேரில் தற்போது அதற்கான பணிகளை இயக்குநர் நெல்சன் தொடங்கி உள்ளார்.

இந்தப் படத்தில் ரஜினிக்கு ஜோடியாக நயன்தாரா நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளியானது. ஏற்கனவே நயன்தாரா நடிகர் ரஜினிகாந்த்துடன் இணைந்து ‘சந்திரமுகி’, ‘தர்பார்’, ‘அண்ணாத்த’ ஆகிய படங்களில் நடித்தார்.

தற்போது ரஜினிகாந்த் ஞானவேல் இயக்கத்தில் ‘வேட்டையன்’ திரைப்படத்தில் நடித்து வருகிறார். அதனைத் தொடர்ந்து லோகேஷ் கனகராஜ் இயக்கும் படத்தில் நடிக்க இருக்கிறார். இந்த படங்களை முடித்த பின்னர் ஜெயிலர் 2ஆம் பாகத்தில் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

இதனை கன்பார்ம் செய்யும் விதமாக தற்போது ஒரு புதிய அப்டேட் ஒன்று வெளியாகியுள்ளது. ஜெயிலர் முதல் பாகத்தில் ரஜினிகாந்த தனது மகன் வசந்த் ரவியை கொலை செய்துவிடுவார். ஆனால் அவரது மனைவி மிர்னா மேனன் கதாபாத்திரத்திறம் ஜெயிலர் இரண்டாம் பாகத்தில் இருக்கும்.

அதேபோல், மிர்னா மேனனின் கால்ஷீட்டையும் நெல்சன் வாங்கியிருப்பதாக கூறப்படுகிறது. மேலும், மிர்னா மேனன் சமீபத்தில் ஒரு பேட்டி கொடுத்திருக்கிறார். அந்த பேட்டியில் அவர் ஜெயிலர் 2 குறித்த முக்கிய அப்டேட்டை வெளியிட்டுள்ளார்.

ஜெயிலர் 2 படத்தின் ஸ்க்ரிப்ட் குறித்த வேலைகளில் நெல்சன் பிஸியாக இருப்பதாக தெரிவித்துள்ளார். மேலும், தானும் ஜெயிலர் 2ல் நடிக்க இருப்பதாக கூறியது. இதனால், ஜெயிலர் 2 கன்பார்மாக விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here