திருப்பதியில் சாமி தரிசனம் செய்த நந்திதா..! வைரலாகும் புகைப்படங்கள்..!

0
122

Nandita Swetha: தமிழ் சினிமாவில் ‘அட்டக்கத்தி’ படத்தின் மூலம் பிரபலமடைந்தவர் நந்திதா ஸ்வேதா. தொடர்ந்து அவர் ‘எதிர்நீச்சல்’, ‘இதற்குதானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா’, ‘நளனும் நந்தினியும்’, ‘முண்டாசுபட்டி’, ‘புலி’ உள்ளிட்ட பல படங்களில் நடித்தார்.

இவர் தற்போது ‘ரணம்’ என்ற படத்தில் நடித்து வருகிறார். மேலும், தெலுங்கில் ‘ரா ரா பெனிமிட்டி’ என்ற படத்திலும் நடித்து வருகிறார். சமீபத்தில் ‘பைப்ரோமியால்ஜியா’ என்ற தசை கோளாறால் நந்திதா பாதிக்கப்பட்டார். இதற்கான சிகிச்சையும் பெற்று வருகிறார்.

இந்த நிலையில் நந்திதா குடும்பத்துடன் திருப்பதியில் சுவாமி தரிசனம் செய்துள்ளார். சுவாமி தரிசனத்திற்கு பிறகு அவர் செய்தியாளர்களைச் சந்தித்துள்ளார். அப்போது பேசிய அவர், “நல்லபடியாக சாமி தரிசனத்தை முடித்து விட்டேன்.

2024ஆம் வருடம் தொடங்கி இருக்கிறது. மேலும் ஆந்திராவில் சர்வதேச திரைப்பட விழா நடந்து கொண்டிருக்கிறது. இதற்காக, இப்போது நான் வந்தேன். தமிழ், தெலுங்கு என இரண்டிலும் நல்ல படங்களில் நடித்து வருகிறேன். மேலும் இரண்டு படங்களில் ஒப்பந்தம் செய்துள்ளேன்” என கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here