பழைய புடவைகளை விற்று பணம் ஈட்டும் நடிகை.. வறுத்தெடுத்த நெட்டிசன்கள்..

0
65

NavyaNair: தமிழ் சினிமாவில் ‘ராமன் தேடிய சீதை’, ‘மாயக்கண்ணாடி’ உள்ளிட்ட படங்களில் நடித்தவர் மலையாள நடிகை நவ்யா நாயர். தற்போது இவர் மலையாளம் மற்றும் கன்னட மொழிப் படங்களில் நடித்து வருகிறார்.

சில நாட்களுக்கு முன்னர் நவ்யா நாயர் தனது சமூக வலைதளப்பக்கத்தில், ‘நான் புதிதாக வாங்கிய ஒரு புடவையை ஒரு முறை அணிந்துவிட்டு மறுமுறை பயன்படுத்த முடியாமல் போகும் புடவைகளை ஆன்லைனில் விற்று பணம் சம்பாதிப்பேன்’ என தெரிவித்திருந்தார்.

இதுபோல, தன்னிடம் கைத்தறி, காஞ்சிபுரம், பனாரஸ் உள்ளிட்ட புடைவைகள் இடுப்பதாகவும் அவர் தெரிவித்திருந்தார். இந்த பதிவு பெரும் விமர்சனத்திற்குள்ளானது. தொடர்ந்து இது குறித்து ரசிகர்கள் பல கேள்விகளை எழுப்பி வந்தனர்.

இந்த நிலையில், தற்போது இதற்கு பதில் கிடைத்துள்ளது, ஆன்லைனில் புடவைகளை விற்று கிடைக்கும் பணத்தை பத்தனாபுரத்தில் உள்ள காந்திபவனுக்கு நன்கொடையாக கொடுப்பதாக கூறப்படுகிறது.

மேலும், அந்த பணத்தில் அங்கு வசிப்பவர்களுக்கு புதிய ஆடைகள், பயனுள்ள பொருட்கள் வாங்கி கொடுக்கிறார். இந்த காந்திபவன் சிறப்பு பள்ளிக்கு ஒரு லட்சம் நன்கொடையையும் நவ்யா நாயர் வழங்கியுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here