‘ஷாருக்கானை ஒரு நடிகரா மட்டும் பிடிக்காது’ – நயன்தாராவின் பேச்சால் ஷாக்கான ரசிகர்கள்..!

0
119

Nayanthara about Shahrukh Khan: இயக்குநர் அட்லி இயக்கத்தில் நடிகர் ஷாருக்கான், நயன்தாரா, விஜய் சேதுபதி, தீபிகா படுகோன், பிரியாமணி உள்ளிட்டோர் நடிப்பில் ‘ஜவான்’ திரைப்படம் கடந்த செப்டம்பர் மாதம் வெளியானது.

இந்த படம் ஹிந்தியில் மட்டுமல்லாது தமிழ், தெலுங்கு மொழிகளிலும் ரிலீஸானது. ஜவான் திரைப்படம் வரலாறு காணாத அளவிற்கு வசூல் சாதனை படைத்தது.

இந்திய சினிமாவை உலக சினிமா திரும்பி பார்க்கும் வகையில் கிட்டத்தட்ட 1000 கோடி ரூபாய் வசூலை செய்தது. இந்த படத்தை ஷாருக்கான் ரசிகர்கள் கொண்டாடி தீர்த்தனர்.

இந்த நிலையில் நடிகை நயன்தாரா ‘ஜவான்’ படத்தில் ஷாருக்கானுடன் இணைந்து நடித்தது குறித்து பேசியுள்ளார். அவர் கூறியதாவது, “ஷாருக்காருக்கு ரசிகராக யார் தான் இருக்கமாட்டார்?. நாம் அனைவரும் அவர் படத்தை பார்த்து வளர்ந்துள்ளோம்.

ஷாருக்கானை எல்லோருக்கும் பிடிக்கும். அவர் ஒரு சிறந்த நடிகர் என்பதற்காக மட்டும் அவரை பிடிக்கும் என்பதல்ல, அதற்கும் மேல் அவர் பெண்களை மதிக்கக் கூடியவராக இருக்கிறார்” என்றார். தற்போது இந்த பேச்சு சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here