‘நல்ல பையன் கிடைத்தால் மறுமணம் செய்துகொள்வேன்’ – நடிகை நிஹாரிகா!

0
86

தமிழ் சினிமாவில் நடிகர் விஜய் சேதுபதியுடன் சேர்ந்து ‘ஒரு நல்ல நாள் பார்த்து சொல்றேன்’ என்ற படத்தில் நடித்திருந்தவர் தெலுங்கு நடிகை நிஹாரிகா. இவர் ஏராளமான தெலுங்கு படங்களில் நடித்திருக்கிறார்.

இவர் சிரஞ்சீவியின் சகோதரரும், நடிகருமான நாகபாபுவின் மகள். நிஹாரிகாவுக்கும், சைதன்யா என்பவருக்கும் கடந்த ஒரு வருடத்திற்கு முன்பு திருமணம் நடந்தது. இந்த நிலையில், கடந்த சில மாதங்களுக்கு முன்பு இருவரும் விவாகரத்து செய்து கொண்டதாக தகவல் வெளியானது.

இந்த நிலையில், தனது விவாகரத்து குறித்து முதல் முறையாக நிஹாரிகா வெளிப்படையாக பேசியிருக்கிறார். இது குறித்து அவர் பேசுகையில், “என் திருமணமானது பெற்றோர் நிச்சயம் செய்தது. விவாகரத்து பெற்றபோது என்னை நிறைய பேர் பல விதமாக பேசினார்கள். நிறைய அழுதேன்.

வாழ்நாள் முழுவதும் சேர்ந்திருக்க வேண்டும் என்று தான் திருமணம் செய்து கொள்கிறோம். ஆனால், எல்லாம் நினைத்த மாதிரி நடக்கவில்லை. இதுவும் அப்படித்தான். விவாகரத்து பெற்றதும் எனது கேரக்டரை தவறாக பேசினார்கள்.

அப்போது தாங்க முடியாமல் அழுதேன். ஆனால் என் குடும்பம் என் மீது தவறு கூறவில்லை. இந்த இரண்டு ஆண்டுகளில் குடும்பத்தின் மதிப்பு என்ன என்பதை தெரிந்துகொண்டேன்.

யாரையும் நம்பக்கூடாது என்பதும் புரிந்தது. இதை ஒரு பாடமாக எடுத்துக்கொண்டேன். எனக்கு 30 வயது தான் ஆகிறது. ஒரு நல்ல பையன் கிடைத்தால் மறுமணம் செய்து கொள்ளத் தயாராக இருக்கிறேன்” என்றார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here