பிரபல நடிகை கடத்தல்..! கொடூர கும்பலிடம் இருந்து உயிர் பிழைத்து தப்பியது எப்படி?..

0
104

Actress Kidnapped: ஹிந்தி படங்கள் மற்றும் சின்னத்திரை சீரியல்களில் நடித்து பிரபலமானவர் ஃப்ரோசா கான். இவர் பல திரைப்படங்களில் பின்னணி பாடகியாகவும் இருந்துள்ளார்.

சமீபத்தில் அவர் கொடுத்த பேட்டி ஒன்றில் தன்னை கடத்தப்பட்ட சம்பவம் குறித்து பேசியுள்ளார். அதில், “நான் எல்லோரிடமும் சகஜமாக பழகுவது உண்டு. இப்படி இருப்பது பெரும் ஆபத்தில் முடியும் என நெருக்கமான பலர் என்னை எச்சரித்து உண்டு. இருந்தபோதிலும் நான் அதனை கேட்கவில்லை.

அவர்கள் கூறியது போலவே நடந்து விட்டது. மும்பையில் உள்ள நலசோபரா குடிசை பகுதிக்கு சென்றபோது ஒரு கும்பல் என்னை கடத்திச் சென்று அடைத்து வைத்து சித்ரவதை செய்தது.

அந்த கடத்தல் கும்பலிடம் இருந்து வெளியில் சொல்ல முடியாத அளவிற்கு பல துன்பங்களை நான் அனுபவித்திருக்கிறேன். நம்பிக்கையை இழக்காமல் போராடி அங்கிருந்து தப்பினேன். சிறு வயதிலேயே குடும்பத்தை விட்டு வந்ததால் பல கஷ்டங்களை அனுபவித்துள்ளேன்.

இப்படி இருக்கும் சூழலில் அடிக்கடி தன்னை நடிகை கங்கனா ரணாவத்துடன் ஒப்பிட்டுப் பார்ப்பேன். அவரும் என்னைப்போல குடும்பத்தை விட்டு பிரிந்து வந்தவர் தான்.

குடும்பத்தை பிரிந்து வந்தாலும், எனது குடும்பத்தை அதிகம் நேசிக்கிறேன்” என்றார். இந்த தகவல் வெளியான நிலையில், நடிகை ஃப்ரோசா கானை கடத்தியது யார்? எதற்காக கடத்தப்பட்டார்? உள்ளிட்ட பல்வேறு கேள்விகள் எழுந்துள்ளன.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here