Actress Oviya: தமிழ் சினிமாவில் ‘களவாணி’, ‘மெரினா’, ‘மதயானை கூட்டம்’, ‘கலகலப்பு’, ‘சிலுக்குவார்பட்டி சிங்கம்’ உள்ளிட்ட பல படங்களில் நடித்து பிரபலமடைந்தவர் நடிகை ஓவியா. ‘பிக்பாஸ்’ நிகழ்ச்சியில் கலந்துகொண்டு, தனது வெளிப்படையான பேச்சால் அனைவராலும் கவரப்பட்டார்.
தொடர்ந்து அவர் தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னடம் ஆகிய படங்களில் நடித்து வருகிறார். தற்போது ஓவியாவிற்கு 32 வயதாகும் நிலையில் திருமணம் எப்போது என பலரும் கேள்வி கேட்க ஆரம்பித்துவிட்டனர்.
இந்த நிலையில், இதற்கு சமீபத்தில் ஓவியா அளித்துள்ள பேட்டியில் பதிலளித்துள்ளார். அப்போது அவர் கூறியதாவது, ‘சிங்கிளாக வாழ்வதிலேயே நான் மகிழ்ச்சியாக இருக்கிறேன். என்னுடைய மகிழ்ச்சிக்கு இன்னொரு துணை இல்லை என்பது எனது எண்ணம்.
திருமணம் என்பது அதற்கான நேரம் வரும்போது அமையட்டும். அதுவாக வந்தால் ஓகே தான். இல்லையென்றாலும் பரவாயில்லை. நான் எப்போதும் மகிழ்ச்சியாகவே இருப்பேன். யாரிடமும் நான் எதையும் எதிர்பார்க்கவில்லை. சிங்கிளாக வாழ்வதையே நான் மிகவும் விரும்புகிறேன்” என்றார் ஓவியா.