‘The Greatest of all Time படம் தீபாவளிக்கு வரலாம்’ – சூசகமாக சொன்ன நடிகை பார்வதி நாயர்!

0
111

‘The Greatest of all Time’: இயக்குநர் வெங்கட் பிரபு இயக்கத்தில் நடிகர் விஜய் நடிக்கும் படம் ‘The Greatest of all Time’. இந்த படத்தை ஏஜிஎஸ் தயாரிப்பு நிறுவனம் தயாரித்து வருகிறது.

தளபதிக்கு ஜோடியாக நடிகை மீனாட்சி சவுத்ரி நடிக்கிறார். மேலும், சினேகா மற்றும் லைலா ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளனர்.

அதுமட்டுமல்லாமல் நடிகர்கள் இந்த படத்தில் பிரசாந்த், மோகன், பிரபுதேவா, ஜெயராம், கணேஷ், யோகிபாபு, அஜ்மல் அமீர், வைபவ், பிரேம் ஜி, அரவிந்த் ஆகாஷ், அஜய் ராஜ், சினேகா, லைலா, மீனாட்சி சவுத்ரி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.

ஏ.ஜி.எஸ். நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார். இந்த படத்தின் படப்பிடிப்புகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

மேலும், இந்த படத்தில் பார்வதி நாயர் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இந்த நிலையில், பார்வதி நாயர் சமீபத்தில் அளித்த பேட்டியில் அவர் பேசியதாவது, “விஜய் இந்த படத்தில் வித்தியாசமான தோற்றத்தில் நடிக்கிறார்.

தாடி வைத்த தோற்றத்துடன் தான் விஜய்யை பார்த்திருப்போம், தற்போது புதிய தோற்றத்தில் பார்ப்பது வித்தியாசமாக இருக்கிறது. விஜய் நேரில் பார்ப்பதற்கு இளமையாக இருக்கிறார்.

அவரது இந்த வசீகரமான தோற்றத்தால் எந்த வயதிலும் நடிக்க முடியும். இந்த படம் தீபாவளிக்கு வெளியாகலாம்” என நடிகை சூசகமாக தெரிவித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here