பாலிவுட் நடிகை பூனம் பாண்டே இறப்புக்கு என்ன காரணம் தெரியுமா?.. வெளியான தகவல்..!

0
139

Poonam Pandey: பாலிவுட்டில் ‘நஷா’ என்ற திரைப்படம் மூலம் அறிமுகமானவர் நடிகை பூனம் பாண்டே (32). மாடலிங் துறையில் பிரபலமான இவர் ஹிந்தி, கன்னடா, தெலுங்கு ஆகிய படங்களில் நடித்திருக்கிறார்.

மேலும், 2011ஆம் ஆண்டு நடந்த உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்தியா வென்றால் தான் நிர்வாணமாக போஸ் கொடுப்பதாக அறிவித்து பெரும் சர்ச்சையை ஏற்படுத்தினார்.

தொடர்ந்து, இவர் 2020ஆம் ஆண்டு தன் காதலன் சாம் பாம்பெயை திருமணம் செய்துகொண்டார். இதனிடையே, பூனம் பாண்டே கர்ப்பப்பை வாய் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சப் பெற்றுவந்தார்.

கர்ப்பப்பை வாய் புற்றுநோயால் பாதிக்கப்பட்ட பூனம் பாண்டே இன்று சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தார். நடிகை பூனம் பாண்டே இறந்த சம்பவம் அவரது ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையில், தற்போது அவரது உடலுக்கு திரைப்பிரபலங்கள், உறவினர்கள் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here