‘இவரால் தான் நான் சினிமாவில் நடித்து வருகிறேன்’.. மனம் திறந்த பிரியாமணி..

0
110

Priyamani: தமிழ் சினிமாவின் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் பிரியாமணி. இவரது நடிப்பில் வெளியான ‘பருத்திவீரன்’ படத்தின் மூலம் பிரியாமணிக்கு ரசிகர்கள் குவிந்தனர். இந்த படத்திற்காக அவருக்கு சிறந்த நடிகைக்கான தேசிய விருதும் கிடைத்தது.

தொடர்ந்து தற்போது வரை சினிமாவில் நடித்து வருகிறார். தமிழ் படங்களில் நடிக்கவில்லை என்றாலும் ஹிந்தி படங்களில் தொடர்ந்து நடித்து வருகிறார். ஹிந்தியில் சமீபத்தில் வெளியான ‘ஆர்டிகிள் 370’ படத்தின் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.

மேலும், ‘மைதான்’ என்ற படத்திலும் நடித்து ரசிகர்களிடம் நல்ல பாராட்டு பெற்றார். இவர், முஸ்தபா ராஜ் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களது திருமணத்துக்கு எதிராக பலரும் அவதூறு பரப்பி மன உளைச்சலை ஏற்படுத்தியதாக பிரியாமணி கூறியுள்ளார்.

இது குறித்து அவர் கூறுகையில், “எங்களது திருமணத்திற்கு எதிராக வந்த அவதூறுகள் என்னை மிகவும் பாதித்தது. எனக்கு மட்டும் அல்ல எனது அப்பா, அம்மாவுக்கும் கஷ்டமாக இருந்தது. அப்போது, எனது கணவர் தான் எனக்கு பக்கபலமாக இருந்து, ‘எது நடந்தாலும் நான் பார்த்துக் கொள்கிறேன். நீ கவலைப்படாதே, சினிமாவில் கவனம் செலுத்து’ என்றார்.

இப்படிப்பட்ட கணவர் எனக்கு கிடைத்தது அதிர்ஷ்டமாக நினைக்கிறேன். எங்களுக்கு எதிராக நிறைய வதந்திகளை பரப்பப்பட்டன” என்றார். மேலும், 40 வயதை கடந்தும் பிரியாமணி கதாநாயகியாகவும், குணசித்திர வேடங்களிலும் நடிக்க தனது கணவர் தான் காரணம் என்றார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here