‘நாங்களும் அழகாக தான் இருக்கிறோம்’ – ஹிந்தி நடிகைகளுடன் ஒப்பிட்டு பிரியாமணி பேச்சு..!

0
119

Actress Priyamani: தமிழ், தெலுங்கு, கன்னடம், ஹிந்தி திரையுலகில் முன்னணி நடிகையாக இருப்பவர் பிரியாமணி. இவர் ‘பேமிலிமேன்’ வெப் சீரீஸில் நடித்த பிறகு பாலிவுட்டில் பிரபலமாகினார். சமீபத்தில் இவர் நடிப்பில் வெளியான ‘ஆர்டிகிள் 370’ படம் மாபெரும் ஹிட்டானது.

அதனைத் தொடர்ந்து தற்போது பல்வேறு பாலிவுட் படங்களில் நடித்து வருகிறார். இந்த நிலையில் சமீபத்தில் அவர் அளித்த பேட்டியில் சினிமாவில் தென்னிந்திய, வடஇந்திய நடிகைகள் என பாகுபாடு பார்க்க வேண்டாம் என வருத்தமாக பேசியுள்ளார்.

இதுகுறித்து அவர் பேசியதாவது, “சினிமாவில் தென்னிந்திய, வடஇந்திய நடிகைகள் என்ற பாகுபாடு இருப்பது வருத்தமாக உள்ளது. தற்போது தென்னிந்திய நடிகைகள் அனைத்து மொழிப் படங்களிலும் நடித்து தங்களது திறமைகளை வெளிப்படுத்துகின்றனர்.

மேலும், சில ஹிந்தி இயக்குநர்கள், ‘தென்னிந்தியாவுக்கு தொடர்புள்ள கதாபாத்திரம் என்பதால் உங்களை தேர்வு செய்துள்ளோம்’ என கூறுகின்றனர். இந்த மனநிலையை மாற்ற வேண்டும்.

தென்னிந்திய நடிகைகளுக்கும் ஹிந்தி சரளமாக பேசத் தெரியும், நாங்களும் அழகாக தான் இருக்கிறோம். ஆனால், எங்களது நிறம் ஹிந்தி நடிகைகள் அளவிற்கு இருக்காது அவ்வளவுதான். நிறம் பெரிய விஷயம் கிடையாது.

தென்னிந்திய நடிகைகளுக்கு அனைத்து மொழிகளிலும் புரிதல் இருக்கிறது. நாங்கள் வசனங்கள் பேசும்போது தவறுகள் ஏற்படலாம் ஆனால் எமோஷனை நன்றாக வெளிப்படுத்துவோம். எனவே இந்த பாகுபாடு இனிமேல் பார்க்க வேண்டாம். எல்லோரும் இந்திய நடிகர் நடிகைகள் தான்” ‘என்றார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here