ரச்சித்தா கதாநாயகியாக நடிக்கும் புதிய படம் பூஜையுடன் தொடக்கம்..!

0
157

தனியார் தொலைக்காட்சியில் வெளியான ‘சரவணன் மீனாட்சி’ என்ற தொடர் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் ரச்சித்தா மகாலட்சுமி. இவர், பல தொடர்களில் நடித்துள்ளார்.

மேலும், கன்னடத்தில் வெளியான ‘பாரிஜாத’ என்ற படத்தில் நடித்திருந்தார். அதனைத் தொடர்ந்து, தமிழில் ‘உப்புகருவாடு’ என்ற படத்தில் இரண்டாவது நாயகியாக நடித்தார்.

அதன்பிறகு, ‘மெய்நிகர்’, ‘நெருப்பு’ உள்ளிட்ட சில படங்களில் ரச்சித்தா நடித்தார். இந்த நிலையில், தற்போது அவர் ‘எக்ஸ்ட்ரீம்’ என்ற படத்தின் மூலம் கதாநாயகியாக கால் பதிக்கவுள்ளார். இந்த படத்தில் அவர் ஒரு காவல் துறை அதிகாரியாக நடிக்கிறார். இந்த படத்தை ராஜவேல் கிருஷ்ணா இயக்குகிறார்.

இந்த படத்தை சீகர்ஸ் பிக்சர்ஸ் நிறுவனம் சார்பில் கமலகுமாரி, ராஜ்குமார் ஆகியோர் தங்களது இரண்டாவது படைப்பாக தயாரிக்கின்றனர். மேலும், இந்த படத்தில் அபி நட்சத்ரா, ஆனந்த் நாக், அம்ரிதா ஷெல்டர் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்கள்.

இவர்களுடன் ராஜ்குமார், சிவம் ஆகியோரும் நடிக்கிறார்கள். இந்த படத்தை டி.ஜே.பாலா ஒளிப்பதிவு செய்கிறார். மேலும், ராஜ் பிரதாப் இசையமைக்கிறார்.

தொடர்ந்து இந்தப் படம் குறித்து இயக்குநர் ராஜவேல் கிருஷ்ணா கூறியதாவது, “இது ஒரு சஸ்பென்ஸ் கிரைம் திரில்லர் படம். ‘எக்ஸ்ட்ரீம்’ என்றால் உச்சக்கட்டம், தீவிரம், அளவுக்கு அதிகம்னு சொல்லுவோம். அனைத்திற்கும் ஒரு லிமிட் இருக்கு.

ஆனால் அதை மீறும்போது நடக்குற விளைவுதான் இந்த படத்தின் கதை. ஹியூமன் என்பதே சுய கட்டுப்பாட்டோடு இருப்பதுதான். அதை மீறும்போது மிருகமாக மாறிவிடுகிறோம்.

சுய கட்டுப்பாட்டோட இருக்கிறவங்களையும், சுதந்திரம் என்ற பெயரில் தவறு செய்ய வைப்பதும் பெண்தான். அதற்கு தீர்வு சொல்லுவதும் பெண்தான் என்பதை மையமாக வைத்து திரைக்கதை அமைத்திருக்கிறோம்.

இந்த கருத்து பெண்களுக்கு எதிரானதாக இருப்பதாக கூறி நிறைய பேர் நடிக்க மறுத்து விட்டனர். ஆனால் பெண் குழந்தைகளை பெற்ற எல்லா பெற்றோர்களும் கண்டிப்பாக இந்த கதையை ஒத்துக் கொள்வார்கள். அப்படியொரு முக்கியமான கருத்தை அனைவருக்கும் கூறவிருக்கிறோம்.

இந்த படத்தில் ரச்சித்தா மகாலட்சுமி காவல் துறை அதிகாரியாக நடிக்கிறார்” என்றார். தொடர்ந்து இந்த படத்தின் பணிகள் நேற்று பூஜையுடன் தொடங்கியது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here