கேப்டன் உருவபடத்திற்கு மலர் தூவி அஞ்சலி செலுத்திய ரம்பா..!

0
89

Captain Vijayakanth: நடிகரும் தேமுதிக தலைவருமான கேப்டன் விஜயகாந்த கடந்த டிசம்பர் மாதம் 28ஆம் தேதி உடல்நலக்குறைவு காரணமாக காலமானார். இவரது உடகுக்கு பல்வேறு கட்சித் தலைவர்கள், சினிமா பிரபலங்கள், தொண்டர்கள், ரசிகர்கள், பொதுமக்கள் என ஏராளமானோர் அஞ்சலி செலுத்தினர்.

இதனைத் தொடர்ந்து டிசம்பர் 29ஆம் தேதி விஜயகாந்த்தின் உடல் தேமுதிக அலுவலகத்தில் 72 குண்டுகள் முழங்க முழு அரசு மரியாதையுடன் நல்லடக்கம் செய்யப்பட்டது. அந்த இடத்தில் தற்போது வரை பொதுமக்கள் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

இந்த நிலையில், தற்போது நடிகை ரம்பா, விஜயகாந்த்தின் வீட்டிற்குச் சென்று கேப்டனின் புகைப்படத்திற்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தினார். தொடர்ந்து, பிரேமலதா விஜயகாந்த மற்றும் அவரது மகன்களுக்கு ஆறுதல் கூறிச் சென்றார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here