‘எனது செயல் மாற்றத்தை தூண்டியுள்ளது’ – நடிகை ரஞ்சனா நாச்சியார்!

0
160

தமிழ் சினிமாவில் ‘துப்பறிவாளன்’, ‘இரும்புத்திரை’, ‘அண்ணாத்த’ போன்ற படங்களில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்தவர் நடிகை ரஞ்சனா நாச்சியார்.

இவர் சமீபத்தில் குன்றத்தூரில் அரசு பேருந்தில் படிக்கட்டில் தொங்கியபடி பயணம் செய்த பள்ளி மாணவர்களை அடித்த சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்டார். அதனைத் தொடர்ந்து நிபந்தனை ஜாமீனில் வெளிவந்தார்.

மேலும், மாணவர்கள் பேருந்து படிக்கட்டில் தொங்கியபடி பயணம் செய்வதை தடுக்க அனைத்து பேருந்துகளில் தானியங்கி கதவுகள் அமைக்கப்பட வேண்டும். அனைத்து பேருதுகளிலும் கண்காணிப்புக் கேமராக்கள் அமைக்கப்படும் என சமீபத்தில் போக்குவரத்து துறை சார்பில் தெரிவிக்கப்பட்டு இருந்தது.

இந்த நிலையில் தமிழ்நாடு பேருந்துகளில் தானியங்கி கதவுகள், கண்காணிப்புக் கேமராக்கள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த மாற்றம் குறித்து நடிகை ரஞ்சனா நாச்சியார் தனது ‘X’ தளத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அதில், “அரசு பேருந்து படிக்கட்டில் தொங்கியபடி பயணித்த மாணவர்களை சொந்த குழந்தைகளை திட்டுவது போல் கண்டிததேன். அது எனக்கு மன உளைச்சலையும் நிதி இழப்பையும் தந்தாலும் எனது செயல் மாற்றத்தை தூண்டியுள்ளது.

தமிழ்நாடு போக்குவரத்து துறை தற்போது பேருந்துகளில் தானியங்கி கதவுகள் மற்றும் சிசிடிவி கேமராக்களை நிறுவுகிறது. இது அந்த சவாலான நாளுக்கு கிடைத்த வெற்றி.

தமிழ்நாட்டில் உள்ள அனைத்து பேருந்துகளிலும் இந்த பாதுகாப்பு நடவடிக்கையை விரிவுபடுத்த வேண்டும்” என பதிவிட்டுள்ளார். இந்த பதிவுக்கு பலரும் தங்களது ஆதரவை தெரிவித்து வருகின்றனர்.

இதையும் படிங்க: ‘இளையராஜாவை தேற்ற என்ன செய்வதென்று தெரியவில்லை’ – பவதாரிணி இறப்புக்கு இரங்கல் தெரிவித்த கமல்ஹாசன்..!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here