Actress Samantha: ஆந்திர மாநிலம் திருப்பதி அருகேவுள்ள திருச்சானூர் பத்மாவதி தாயார் கோவிலுக்கு நடிகை சமந்தா இன்று (பிப்.04) காலை சென்றிருந்தார். கோவிலின் சிறப்பு நுழைவுவாயில் வழியாக சமந்தா கோயிலுக்குள் சென்றார்.
தொடர்ந்து அங்கு அவர் சிறப்பு சாமி தரிசனம் செய்தார். பின்னர், அவருக்கு தேவஸ்தான அதிகாரிகள் சமந்தாவிற்கு தீர்த்த பிரசாதம் வழங்கினர். அதனைத் தொடர்ந்து அவர் கோவிலுக்கு வெளியே வந்தார்.
அப்போது, அங்கு இருந்த ரசிகர்கள் சமந்தாவை சூழ்ந்துக்கொண்டனர். தொடர்ந்து அவருடன் செல்ஃபி எடுத்துக்கொண்டனர். அனைத்து ரசிகர்களுடன் சமந்தா செல்ஃபி எடுத்துக் கொண்டார். பின்னர், அங்கிருந்து காரில் புறப்பட்டுச் சென்றார்.