திரையுலகில் 14 ஆண்டுகளை நிறைவு செய்த சமந்தா..!

0
207

‘14 years of Samantha’: தமிழ் சினிமாவின் முன்னணி நடிகைகளில் ஒருவர் சமந்தா. இவர் தொடர்ந்து பல படங்களில் நடித்து வந்த நிலையில் சமீப காலமாக அவர் படங்களில் நடிக்கவில்லை. கடைசியாக தெலுங்கில் விஜய் தேவரகொண்டாவுடன் குஷி என்ற படத்தில் நடித்தார்.

அதன்பிறகு எந்த புதிய படங்களிலும் நடிக்கவில்லை. மேலும், இவர் மயோசிடிஸ் நோய்க்கான சிகிச்சையில் ஈடுபட்டு வருவதாகவும் கூறப்படுகிறது. உடல்நலம் குணமடைந்த பிறகு விரைவில் தமிழ், தெலுங்கு ஆகிய மொழிப் படங்களில் நடிப்பார் என கூறப்பட்டது.

மேலும், சமந்தா எப்போது மீண்டும் நடிக்க வருவார் என ரசிகர்கள் பலரும் கேட்கத் தொடங்கினர். அதற்கு, ‘இந்த இடைப்பட்ட காலத்தில் வேலை இல்லாமல்தான் இருந்தேன் விரைவில் பணிக்குத் திரும்புகிறேன்’ என பதிலளித்திருந்தார்.

இந்த நிலையில், நடிகை சமந்தா திரையுலகிற்கு வந்த 14 ஆண்டுகள் நிறைவுபெற்ற நிலையில் அவருக்கு திரைப்பிரபலங்கள் தங்களது வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில், நடிகை நயன்தாரா, சமந்தாவிற்கு வாழ்த்து கூறியிருக்கிறார்.

மேலும், விரைவில் உடல்நலம் குணமடைந்து சமந்தா தொடர்ந்து பல படங்களில் நடிக்க வேண்டும் எனவும் ரசிகர்கள் வாழ்த்து கூறி சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here