‘குதிரை பயிற்சியில் சமந்தா’..! வைரலாகும் வீடியோ..!

0
111

தமிழ் சினிமானின் முன்னணி நடிகைகளில் ஒருவர் சமந்தா. இவர் தொடர்ந்து பல படங்களில் நடித்து வந்த நிலையில் சமீப காலமாக அவர் படங்களில் நடிக்கவில்லை. கடைசியாக தெலுங்கில் விஜய் தேவரகொண்டாவுடன் குஷி என்ற படத்தில் நடித்தார்.

அதன்பிறகு எந்த புதிய படங்களிலும் நடிக்கவில்லை. மேலும், இவர் மயோசிடிஸ் நோய்க்கான சிகிச்சையில் ஈடுபட்டு வருவதாகவும் கூறப்படுகிறது. உடல்நலம் குணமடைந்த பிறகு விரைவில் தமிழ், தெலுங்கு ஆகிய மொழிப் படங்களில் நடிப்பார் என கூறப்படுகிறது.

இந்த நிலையில், நடிகை சமந்தா தான் வெளிநாடு மற்றும் வெளியிடங்களுக்குச் செல்லும்போது தான் எடுத்தும் புகைப்படங்களை சமூக வலைத்தளங்களில் வெளியிடுவதை வாடிக்கையாக வைத்திருக்கிறார்.

அந்த வகையில் தற்போது, நடிகை சமந்தா தான் குதிரை சவாரி பயிற்சி செய்யும் வீடியோ ஒன்றை பகிர்ந்திருக்கிறார். அந்த பதிவில் ‛சூரிய அஸ்தமனம் மற்றும் குணப்படுத்துதல்’ என குறிப்பிட்டுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here