“ஓ இதனால தான் சமந்தா ஃபிட்டா இருக்காங்களா !..” – லீக்கான சீக்ரெட்..!

0
167

Actress Samantha: தென்னிந்திய சினிமாவின் முன்னணி நடிகைகளில் இருவர் சமந்தா. தமிழில் பல படங்களில் நடித்து தனக்கென ஒரு ரசிகர் பட்டாளமே வைத்திருக்கிறார். தொடர்ந்து, பல ஹிட் படங்களை கொடுத்து வந்த சமந்தா இடையில் தசை அழர்ஜி நோயால் பாதிக்கப்பட்டார். தற்போது மீண்டும் படங்களில் நடிக்க தொடங்கியுள்ளார்.

தொடர்ந்து, தனது பாட்காஸ்ட்டில் தனது ரசிகர்களுக்கு சில விழிப்புணர்வையும் ஏற்படுத்தி வருகிறார். அந்த வகையில் சமீபத்தில் அவர் தனது சொந்த வாழ்க்கை குறித்து பல விஷங்களைப் பகிர்ந்துள்ளார். அதில், “எனக்கு நிறைய ரசிகர்கள் இருக்கின்றனர். இவ்வளவு விஷயங்களை சேர்த்து வைப்பது என்பது சாதாரண விஷயம் கிடையாது.

எனது ரசிகர்கள் நிறைய பேருக்கு பேஷன், மேக்கப் விஷயங்களில் அதிக ஆர்வம் இருக்கிறதை என்னால் தெரிந்துகொள்ள முடிந்தது. ஆரோக்கிய விஷயங்கள் குறித்து நான் பேசுவது சிலருக்கு தாக்கத்தை ஏற்படுத்தினாலும் நான் சந்தோஷப்படுவேன்.

எனது மனதுக்கு பிடித்ததை செய்து வருகிறேன். எந்த முடிவை எடுத்தாலும் அது சரியானதா? இல்லையா? என ஒன்றுக்கு இரண்டு முறை சிந்தித்துப் பார்ப்பேன்.

மனரீதியாக அமைதியாக இல்லாவிட்டாலும் கூட உடல் ரீதியாக ஃபிட்டாக இருக்க முடியாது. இதனால், மனதை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ளுங்கள். நான் எப்போதும் மெண்டல் ஹெல்த்துக்கு முக்கியத்துவம் கொடுத்து வருகிறேன். அதற்குத் தேவையான உடற்பயிற்சிகளும் செய்கிறேன்” என்றார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here