Simran: தமிழ் சினிமாவில் கொடிகட்டி பறந்த நடிகைகளில் ஒருவர் நடிகை சிம்ரன். தொடர்ந்து பல படங்களில் நடித்து ஹிட் கொடுத்து உச்ச நட்சித்திரமாக திகழ்ந்தவர்.
தற்போது குணசித்திர வேடங்களில் நடித்து தொடர்ந்து சினிமா பயணித்தால் இருக்கிறார். இந்த நிலையில் சிம்ரன் தனது ‘X’ தளத்தில் ரசிகர்கள் கேள்விகளுக்கு பதிலளித்து வந்தார்.
அப்போது ரசிகர் ஒருவர் அஜித்குமாருடன் நடித்த அனுபவம் குறித்து கேள்வி கேட்டார். அதற்கு பதிலளித்த சிம்ரன், “ அஜித்குமாருடன் இணைந்து பணியாற்றுவது எப்போதும் சிறந்த அனுபவமாக இருக்கும்.
சினிமா மீது அவருக்கு இருக்குற அர்ப்பணிப்பை நான் பாராட்டுகிறேன். அவருடன் நடித்த ‘வாலி’ படம் மாபெரும் வெற்றிபெற்றது. இந்த படத்தில் அஜித்துடன் நடித்தது மறக்க முடியாதது” என குறிப்பிட்டுள்ளார்.