புதிதாக தொழில் தொடங்கிய சினேகா..!

0
159

Actress Sneha: தமிழ் சினிமாவில் ‘புன்னகை அரசி’ என ரசிகர்களால் அழைக்கப்பட்டவர் நடிகை சினேகா. இவர் கடந்த 2012ஆம் ஆண்டு நடிகர் பிரசன்னாவை காதலித்து திருமணம் செய்துகொண்டார். இவர்களுக்கு ஆத்யந்தா, விஹான் என இரண்டு குழந்தைகள் உள்ளனர்.

திருமணத்திற்கு பிறகு சினேகா படங்களில் நடிப்பதை குறைத்துக் கொண்டார். சில முக்கிய கதாபாத்திரங்களில் மட்டும் நடித்து வருகிறார்.இவர் தற்போது பல்வேறு தொலைக்காட்சி நிகழ்ச்சிகளிலும் நடுவராக பங்கேற்று வருகிறார்.

தற்போது இயக்குநர் வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய் நடித்துவரும் ‘தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம்’ படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் சினேகா நடித்து வருகிறார்.

இந்த நிலையில், புதிய தொழில் ஒன்றை நடிகை சினேகா தொடங்கியுள்ளார். சென்னை தி.நகரில் ‘சினேகாலயா சில்க்ஸ்’ என்ற பட்டு புடவை கடையை வரும் 12ஆம் தேதி தொடங்க இருப்பதாக அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அறிவித்துள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள பதிவில், “எனது அன்பான ரசிகர்களுக்கு, என் வாழ்க்கை பயணத்தில் நீங்கள் எனக்கு மிகப்பெரிய ஆதரவை வழங்கி உள்ளீர்கள். இத்தனை வருடங்களாக நீங்கள் என் மீது கொடுத்த அன்புற்காக, அனைவருக்கும் நான் என்றென்றும் கடமைப்பட்டிருக்கிறேன்.

அனைவருக்கும் கனவுகள் நனவாவது என்பது வாழ்க்கையில் பெரிய விஷயம். நான் இப்போது ஒரு அற்புதமான மகிழ்ச்சியான தருணத்தில் இருக்கிறேன். நான் சொந்தமாக ‘சினேகாலயா சில்க்ஸ்’ என்ற பட்டுப் புடவை கடையை தொடங்க உள்ளேன்.

எப்போதும் போல உங்கள் அன்பையும் ஆசீர்வாதத்தையும் வேண்டுகிறேன்” என குறிப்பிட்டுள்ளார். அவரது இந்த பதிவிற்கு ரசிகர்கள் பலரும் தங்களது வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here