ஹாலிவுட்டில் கால் பதிக்கும் சோபிதா துலிபாலா..! ரசிகர்கள் வாழ்த்து..!

0
77

தமிழ் சினிமாவில் மணிரத்னம் இயக்கிய ‘பொன்னியின் செல்வன்’ படத்தின் மூலம் பிரபலமடைந்தவர் நடிகை சோபிதா துலிபாலா. தற்போது இவர் தெலுங்கு, ஹிந்தி மொழிப் படங்களிலும் நடித்து வருகிறார்.

இந்த நிலையில், தற்போது ‘மங்கி மேன்’ என்ற ஹாலிவுட் படத்தில் சோபிதா துலிபாலா நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதில் ஸ்லம்டாக் மில்லினர், லயன் ஆகிய படங்களில் நடித்து பிரபலமான தேவ்படேலும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க இருக்கிறார்.

ஹனுமானின் புராண கதையை நவீன காலத்துடன் இணைத்து அதிரடி கதைக்களத்தில் இந்த படம் உருவாக இருப்பதாக கூறப்படுகிறது. இந்தப் படத்தில் சிக்கந்தர் கெர் வில்லனாக நடிக்கிறார். சமீபத்தில் வெளியான படத்தின் டிரைலர் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பு பெற்றது.

இந்த நிலையில், ஹாலிவுட் படத்தில் நடிக்கும் சோபிதா துலிபாலாவுக்குஅ அவரது ரசிகர்கள் தங்களது வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர். மேலும், மங்கிமேன் படத்தின் மூலம் ஹாலிவுட்டில் அறிமுகமாவது மகிழ்ச்சியாக இருப்பதாக சோபிதா துலிபாலா கூறியுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here