தளபதியுடன் டான்ஸ் ஆட இருக்கும் தெலுங்கு பட நாயகி.. இயக்குநர் பிளான் ஒர்க் அவுட் ஆகுமா?.. 

0
137

‘The G.O.A.T.’ : இயக்குநர் வெங்கட் பிரபு இயக்கத்தில் நடிகர் விஜய் நடிக்கும் படம் ‘The Greatest of all Time’. இந்த படத்தை ஏஜிஎஸ் தயாரிப்பு நிறுவனம் தயாரித்து வருகிறது.

தளபதிக்கு ஜோடியாக நடிகை மீனாட்சி சவுத்ரி நடிக்கிறார். மேலும், சினேகா மற்றும் லைலா ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளனர்.

அதுமட்டுமல்லாமல் நடிகர்கள் இந்த படத்தில் பிரசாந்த், மோகன், பிரபுதேவா, ஜெயராம், கணேஷ், யோகிபாபு, அஜ்மல் அமீர், வைபவ், பிரேம் ஜி, அரவிந்த் ஆகாஷ், அஜய் ராஜ், சினேகா, லைலா, மீனாட்சி சவுத்ரி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.

படத்தின் படப்பிடிப்பு தீவிரமாக நடைபெற்று வருகிறது. சமீபத்தில் ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு இயக்குநர் வெங்கட் பிரபு படம் குறித்து புதிய அப்டேட்டை வெளியிட்டார். அதன்படி, ‘The Greatest of all Time’ படம் செப்டம்பர் 5ஆம் தேதி ரிலீஸாகவுள்ளதாக அறிவிக்கப்பட்டது.

அதனைத் தொடர்ந்து படத்தின் பர்ஸ்ட் சிங்கிளான ‘விசில் போடு’ என்ற பாடல் வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது. இந்நிலையில், தற்போது இந்த படத்தில் தெலுங்கு நடிகை ஸ்ரீலீலா ஒரு பாடலுக்கு நடனமாட இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

இதுகுறித்து ஸ்ரீலீலாவிடம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருவதாக கூறப்படுகிறது. கடந்த ஆண்டு டிசம்பரில் மகேஷ் பாபு நடிப்பில் வெளியான ‘குண்டூர் காரம்’ படத்தின் ‘குர்ச்சி மடத்தபெட்டி’ பாடலில் ஸ்ரீலீலா நடனமாடிய நிலையில் உலக அளவில் பிரபமடைந்தார். இதன் மூலம் அவருக்கு பட வாய்ப்புகள் குவிந்து வருகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here