முன்னனி நடிகருக்கு ஜோடியாகும் ஸ்ரீதிவ்யா..! செம்ம குஷியில் ரசிகர்கள்..!

0
133

தமிழ் சினிமாவில், ‘வருத்தப்படாத வாலிபர் சங்கம்’ படத்தின் மூலம் பிரபலமடைந்தவர் ஸ்ரீதிவ்யா. இவரது லதா பாண்டி கதாபாத்திரம் பட்டிதொட்டியெங்கும் பேசப்பட்டது. அதனைத் தொடர்ந்து ‘காக்கி சட்டை’ படத்தில் நடித்தார்.

பின்னர், விக்ரம் பிரபு ஜோடியாக ‘வெள்ளைக்காரதுரை’, கார்த்தி உடன் ‘காஷ்மோரா’, விஷால் ஜோடியாக ‘மருது’, விஷ்ணு விஷாலின் ‘ஜீவா’ உள்ளிட்ட பல படங்களில் நடித்தார்.

தொடர்ந்து பல்வேறு படங்களில் நடித்து வந்த ஸ்ரீதிவ்யா, திடீரென சினிமா பக்கம் எட்டிக்கூட பார்க்கவில்லை. சினிமா வாய்ப்புகள் குறைந்ததா அல்லது வேறு ஏதேனும் காரணமா என ரசிகர்கள் குழம்பிபோய் இருந்தனர்.

இந்த நிலையில், சுமார் 4 ஆண்டுகளுக்குப் பிறகு தீபாவளிக்கு வெளிவந்த ‘ரெய்டு’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் ரீ எண்ட்ரி கொடுத்தார். இந்த நிலையில் தற்போது ஸ்ரீதிவ்யா தமிழ் சினிமாவின் முன்னனி நடிகருடன் இணைந்து நடிக்க வாய்ப்பு கிடைத்துள்ளது.

அதன்படி, ‘96’ படத்தின் இயக்குநர் பிரேம்குமார் இயக்கத்தில் நடிகர் கார்த்தி, அரவிந்த் சாமி நடிக்கும் ‘Karthi 27’ படம் உருவாகி வருகிறது. இந்த படத்தில் தான் ஸ்ரீதிவ்யா நடிக்க இருக்கிறார். முன்னதாக இருவரும் காஷ்மோரா படத்தில் இணைந்து நடித்திருந்தனர்.

இந்த நிலையில், தற்போது மீண்டும் கார்த்தியும் ஸ்ரீதிவ்யாவும் இணைந்து நடிக்கவுள்ளனர். இந்த படத்தில் ஸ்ரீ திவ்யா உடன் மற்றுமொரு கதாநாயகியும் நடிக்க இருக்கிறார்.

தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் ‘ஈரமான ரோஜாவே பாகம் 2’ தொடரின் நாயகி சுவாதி தான் கார்த்தி படத்தில் இரண்டாவது கதாநாயகியாக நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது. மேலும், இவர் இப்படத்தில் வில்லனாக நடிக்கும் அரவிந்த் சாமிக்கு ஜோடியாக நடித்து வருவதாக கூறப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here