Actress Taapsee: தமிழ் சினிமாவில் ஆடுகளம் படத்தின் மூலம் அறிமுகமானவர் நடிகை டாப்சி. தொடர்ந்து தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஹிந்தி என பல்வேறு மொழிகளில் அவர் நடித்து வருகிறார்.
கடந்த ஆண்டு டிசம்பர் மாதத்தில் ஷாருக் கான் நடிப்பில் வெளியான டங்கி படத்தில் டாப்சி முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இந்த நிலையில், டாப்சிக்கு விரைவில் திருமணம் நடைபெறவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
மேலும், தனது நீண்டகால நண்பரும், பேட்மின்டன் வீரருமான மத்யாஸ் போ என்பவரை டாப்சி திருமணம் செய்துகொள்ளவுள்ளதாக கூறப்படுகிறது. இருவரின் திருமணம் உதய்பூரில் பிரமாண்டமாக நடைபெற உள்ளது.
இந்த நிலையில் சமீபத்தில் டாப்ஸி அளித்த பேட்டி ஒன்றில் தனது திருமணம் குறித்து பேசியிருக்கிறார், அதில், “எனது திருமணம் குறித்த வதந்திகள் நிறைய வெளிவந்த வண்ணம் உள்ளன. எனது திருமணத்திற்கு நீங்கள் எதற்கு இவ்வளவு ஆர்வமாக இருக்கிறீர்கள்.
நான் வெளிப்படையாக இருக்கிறேன். எனது காதலரை தான் திருமணம் செய்துகொள்ள போகிறேன். அதற்குள் எனது திருமணம் குறித்த விஷயங்கள் சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது. எதுக்கு இவ்வளவு ஆர்வம் எனக்கு புரியவில்லை.
இதை இப்படியே விட்டு விட்டால் நானே சரியான நேரத்தில் எனது திருமணம் குறித்து பகிர்வேன். நான் எனது உறவுகளைப் பொறுத்தவரையில் நேர்மையாக இருக்கிறேன், எதையும் மறைக்கவில்லை.
எனவே, எனது திருமணம் நடக்கும்போது நடக்கும், அப்போது உங்களுக்கும் தெரியவரும். மக்கள் எனது நடிப்பை ரசிக்கின்றனர், இதேபோல் எனது தனிப்பட்ட வாழ்க்கை புரிந்துகொள்ள வேண்டும்” என கேட்டுக்கொண்டார்.