சீக்ரெட்டாக தனது திருமணத்தை முடிக்க நினைக்கும் டாப்ஸி..!

0
131

‘Actress taapsee’: தமிழ் சினிமாவில் ஆடுகளம் படத்தின் மூலம் அறிமுகமானவர் நடிகை டாப்சி. தொடர்ந்து தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஹிந்தி என பல்வேறு மொழிகளில் அவர் நடித்து வருகிறார்.

கடந்த ஆண்டு டிசம்பர் மாதத்தில் ஷாருக் கான் நடிப்பில் வெளியான டங்கி படத்தில் டாப்சி முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இந்த நிலையில், டாப்சிக்கு விரைவில் திருமணம் நடைபெறவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

மேலும், தனது நீண்டகால நண்பரும், பேட்மின்டன் வீரருமான டென்மார்க் நாட்டைச் சேர்ந்த மத்யாஸ் போ என்பவரை டாப்சி திருமணம் செய்துகொள்ளவுள்ளார்.

இருவரின் திருமணம் இந்த மாதம் இறுதியில் உதய்பூரில் பிரமாண்டமாக நடைபெற உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த திருமணத்தில் இருவரது குடும்பத்தார் மற்றும் உறவினர்கள் மட்டும் கலந்து கொள்ள உள்ளதாக கூறப்படுகிறது.

இவர்களது திருணமானது சீக்கிய மற்றும் கிறிஸ்துவ முறைப்படி நடைபெற இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. இதனையறிந்த ரசிகர்கள், வெளியில் தெரியாமல் ரகசியாக தனது திருமணத்தை முடிப்பது சரியா? என கேள்வி எழுப்பி வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here